Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND W vs ENG W: இங்கிலாந்து சொந்த மண்ணிலே சம்பவமி செய்த இந்திய மகளிர் அணி.. T20 WC-க்கு ரெடி

செல்ம்ஸ்ஃபோர்டில் நடந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிகஸ் 69 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 54 ரன்களும் குவித்து பேட்டிங்கில் சாதிக்க, பந்துவீச்சில் நந்தினி ஷர்மா 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வலுவாகத் தொடங்கிய இந்திய மகளிர் அணி, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் துல்லியமான பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. அணி வீராங்கனைகள் ஒருங்கிணைந்து செயல்பாட்டினால் தான் இந்த வெற்றி சாத்தியமானது.

முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இந்திய அணி, தொடக்கத்தில் ஸ்மிருதி மந்தனாவை சொந்ப ரன்களிலும் இழந்தாலும், யாஸ்திகா பாட்டியா 40 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 54 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 69 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.

கடைசி ஓவர்களில் தீப்தி ஷர்மாவின் அதிரடி பங்களிப்புடன், இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் லாரன் பெல் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.சவாலான 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே கிராந்தி கவுடிடம் சோபியா டங்க்லி மற்றும் அலிஸ் கேப்சி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. ஏமி ஜோன்ஸ் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 67 ரன்கள் குவித்து தனியொருவராகப் போராடினார்.

கேப்டன் ஹெதர் நைட்டும் 21 ரன்கள் பங்களித்தார். ஆனால், நந்தினி ஷர்மா அபாரமாகப் பந்துவீசி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, முக்கியமான கட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தீப்தி ஷர்மா ஒரு விக்கெட்டை எடுத்ததுடன், வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவுட் கடைசி ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். ஏமி ஜோன்ஸ் தவிர மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால், இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

IPL 2026: குவாலிபையர் 2வில் ராஜஸ்தான், குஜராத் போட்டி மழையால் தடை, டை ஆனால் என்ன ஆகும்? விதி என்ன?

IPL 2026: குவாலிபையர் 2வில் ராஜஸ்தான், குஜராத் போட்டி மழையால் தடை, டை ஆனால் என்ன ஆகும்? விதி என்ன?

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது டி20 போட்டி மே30 சனிக்கிழமை நடைபெறுகிறது. வரும் 12ஆம் தேதி, டி20 உலககோப்பை தொடங்க உள்ள நிலையில், அதற்கு பயிற்சி களமாக இந்த தொடர் பொர்க்கப்படுகிறது. இந்திய அணி , ஜூன் 14ஆம் தேதி பாகிஸ்தானை தங்களது முதல் லீக் ஆட்டத்தில் டி20 உலககோப்பையில் எதிர்கொள்கிறது. 50 ஓவர் உலககோப்பையை வென்ற இந்திய அணி, டி20 உலககோப்பையிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 29, 2026, 11:09 [IST]
Other articles published on May 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+