Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND w vs WI W- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 358 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி.. ஹர்லின் தியோல் சதம்

வதோரா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவரில் 358 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி t20 தொடரை வென்ற நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்றிருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி வதோராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து வழக்கம் போல் தொடக்க வீராங்கனை மந்தானா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

IND w vs WI W India women west indies women Harleen Deol

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய மந்தனா 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவால் 76 ரன்களில் ஆட்டம் இழக்க கேப்டன் ஹர்மன்பிரித் 22 ரன்களில் வெளியேறினார்.

எனினும் மூன்றாவது பேட்டராக களம் இறங்கிய ஹர்லின் தியோல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பதினாறு பௌண்டர்களை குவிக்க 103 மன்று பந்துகளில் 115 ரன்கள் அவர் சேர்த்தார். இறுதியில் ஜெமிமா 36 பந்துகளில் 52 ரன்கள் விளாச, ரிச்சா கோஸ் 6 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்து இருக்கிறது.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தாங்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்து இருக்கிறார்கள். இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் சேர்த்தது இந்தியாவின் சாதனையாக கருதப்பட்டது.

தற்போது அந்த சாதனை மீண்டும் சமன் செய்யப்பட்டிருக்கிறது. உலக அளவில் நியூசிலாந்து மகளிர் அணி அயர்லாந்துக்கு எதிராக 50 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்தது சாதனையாக கருதப்படுகிறது.

Story first published: Tuesday, December 24, 2024, 18:51 [IST]
Other articles published on Dec 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+