மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத்.. பந்தை தூக்கி எறிந்ததால் மோதல்.. நடவடிக்கை பாயுமா?
மும்பை : இந்திய மகளிர் அணியும் ஆஸ்திரேலியா மகளிர் அணியும் மோதிய ஆட்டத்தில் ஒரு சர்ச்சை சம்பவம் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 219 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 406 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு சர்ச்சை சம்பவம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் 80வது ஓவரில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹேலி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீசிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் பந்தை நேராக பிடித்த ஹர்மன்பிரித் நேரடியாக ஆஸ்திரேலிய வீராங்கனை உடலை நோக்கி பந்தை எறிந்தார்.
அப்போது அலிசா ஹெலி தனது பேட்டால் பந்தை தடுத்த நடுவரிடம் இது குறித்து சைகையால் புகார் அளித்தார். இதற்கு பதில் சொன்ன ஹர்மன்பிரித் கவுர் தொடர்ந்து இறங்கி வந்ததால் நான் ரன் அவுட் செய்ய முயன்றேன். ஆனால் அவர் பேட்டால் தடுத்துவிட்டார் என்று கூறினார். எனினும் இது குறித்து நடுவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார். ஹர்மன்பிரீத் பந்தை தூக்கி எறிந்து இருக்கவே தேவையில்லை. ஆனால் அவர் களத்தில் சமீப காலமாக கோபமாக நடந்து கொள்கிறார்.
ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட இவ்வாறு ஹர்மன்பிரீத் நடந்து கொண்டதால் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பேட்ஸ்மேன் நோக்கி அபாயகரமாக பந்து எரிந்த நிலையில் அவர் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஹர்மன்பிரித் பேட்டிங்கில் டக் அவுட் ஆகி வரும் நிலையில் தேவையில்லாமல் களத்தில் நடந்து கொண்டு இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications