Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. 7வது முறையாக சாதனை படைக்குமா இந்தியா..எகிறும் எதிர்பார்ப்பு

வங்கதேசம்: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இன்று மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.

 வெற்றி பயணம்

வெற்றி பயணம்

ஆசிய கோப்பை தொடரில் இதுவரை யாராலும் அசைக்க முடியாத அணியாக இந்தியா இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 7 சீசன்களில் 6 முறை இந்திய அணி மட்டுமே தொடர்ச்சியாக கோப்பை வென்றது. கடைசியாக 2018ல் நடைபெற்ற தொடரில் மட்டும் வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்தது. எனவே 8வது முறையாக கோப்பையை வெல்வதற்கான முனைப்புடன் களமிறங்கவுள்ளனர்.

அசுர பலத்தில் இந்தியா

அசுர பலத்தில் இந்தியா

நடப்பு தொடரில் இந்திய அணியின் தூண்களாக பார்க்கப்படும் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரே பெரியளவில் செயல்படவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சஃபாலி வெர்மா ( 161 ரன்கள், 3 விக்கெட்கள் ), ஜெமிமா ரோட்ரிகஸ் (215 ரன்கள்), தீப்தி சர்மா (94 ரன்கள், 13 விக்கெட்கள் ) என அட்டகாசமாக விளையாடி இந்திய அணியை கரை சேர்த்துள்ளனர்.

கேப்டனின் தேவை

கேப்டனின் தேவை

எனவே இன்றைய போட்டியிலும் இவர்கள் அதே ஃபார்மில் செயல்பட வேண்டும். கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும் இன்று ஒரு அதிரடியை காட்டினால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். மற்றொருபுறம் இலங்கை அணி பெரிய பலத்தில் இல்லையென்றாலும் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த அணியில் பேட்டிங் வரிசை சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

2 பேட்டர்கள் மட்டுமே

2 பேட்டர்கள் மட்டுமே

இலங்கை அணியை பொறுத்தவரையில் ஹர்ஷிதா மாதேவி (201 ரன்கள் ), நிலாக்‌ஷி டி சில்வா (124 ) இருவர் மட்டுமே அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரின் விக்கெட்டை மட்டும் முன்கூட்டியே வீழ்த்திவிட்டால் இந்தியா கோப்பையை வென்றுவிடும். ஆனால் கடந்த 2018ல் பலமான இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 15, 2022, 18:57 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+