Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பிரம்மாண்ட சாதனை.. மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது. பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், தொடரை வென்று கோப்பையை வென்றது. இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வென்ற அணி என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தாலும், ஒரு வீராங்கனையாக மகத்தான சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியின் மூலம் அவர் தனது 334-வது சர்வதேசப் போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம், 333 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்த மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, இந்தியாவிற்காக அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்மன்பிரீத் படைத்தார்.

Harmanpreet Kaur India Women ENG vs IND T20I Series

சர்வதேசப் போட்டிகளில் அதிகளவில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள்:

வீராங்கனை போட்டிகள்
ஹர்மன்பிரீத் கவுர் 334
மிதாலி ராஜ் 333
ஜூலன் கோஸ்வாமி 284
ஸ்மிருதி மந்தனா 261
தீப்தி ஷர்மா 239

36 வயதாகும் ஹர்மன்பிரீத் கவுர், இதுவரை அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 8 சதங்கள் மற்றும் 85 அரைசதங்களை அடித்துள்ளார். உலக அளவில், அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் (346 போட்டிகள்) மற்றும் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (337 போட்டிகள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஹர்மன்பிரீத் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இறுதி டி20 போட்டி:

கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிரடியாக ஆடிய ஷஃபாலி வர்மா 75 ரன்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, கடைசிப் பந்தில் வெற்றியைத் தட்டிப் பறித்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் டானி வியாட்-ஹாட்ஜ் 56 ரன்கள் அடித்தார். இந்தத் தோல்விக்கு மத்தியிலும், இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

Story first published: Sunday, July 13, 2025, 13:34 [IST]
Other articles published on Jul 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+