Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025 மகளிர் உலககோப்பையில் மறக்க முடியாத 5 தருணங்கள்.. சரித்திரம் படைத்தது எப்படி?

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, பெரும் எதிர்பார்ப்புகளின் மத்தியில் தனது உறுதியைக் கைவிடாமல், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றது. 2025 நவம்பர் 3 அன்று மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ரசிகர்களின் நீண்டகால கனவு இறுதியாக நிஜமகியது. இது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றியாகும்.

குரூப் சுற்றில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்த பிறகு, நாக்-அவுட் அபாரமாக விளையாடி இந்தியா மீண்டும் எழுந்தது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் அணி உலகக் கோப்பையை வெல்வதற்காக நீண்டகாலமாக காத்திருந்து. இந்த வெற்றி மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட ஐந்து முக்கிய தருணங்கள் இங்கே பார்ப்போம்.

இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மாவின் அதிரடி

இறுதிப் போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மாவிடம் பந்துவீச அளித்த முடிவானது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. காயமடைந்த பிரத்திகா ராவலுக்குப் பதிலாக மட்டுமே அணிக்குள் வந்த ஷஃபாலி, வீரேந்தர் சேவாக் பாணியில் ஒரு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவே அறியப்பட்டார். ஆனால் அவர் தங்கமாக ஜொலித்தார்.

தனது இரண்டாவது பந்திலேயே சுனே லூஸையும், ஏழாவது பந்திற்க்குள் மரிஸன் காப்பையும் வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவின் ரன் சேசிங்கை ஆரம்பத்திலேயே முடக்கிப் போட்டார். போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "அது அவரது நாளாகத் தோன்றியது" என்று தனது உள்ளுணர்வைப் பின்தொடர்ந்ததாகத் தெரிவித்தார். முன்னதாக 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்திய வர்மா, ஆட்ட நாயகி விருதை வென்றார்.

அமன்ஜோத்தின் அசாத்திய கேட்ச்

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான லாரா வோல்வார்ட், இந்தத் தொடரின் முன்னணி வீராங்கனையாக இருந்தார். ரன் குவிப்புப் பட்டியலில் முதலிடம் வகித்ததோடு மட்டுமல்லாமல், அரையிறுதியில் சதம் அடித்து இங்கிலாந்தையும் வெளியேற்றினார். இறுதிப் போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக அதேபோல மற்றொரு அற்புதமான சதத்தை அடித்து அச்சுறுத்தினார்.

வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வோல்வார்ட் ஒரு முழுமையான தாக்குதலில் ஈடுபட்டார். ஆனால் தீப்தி ஷர்மாவின் பந்தில் அவர் அடித்த பந்து, லாங்-ஆன் திசை நோக்கி உயரே பறந்தது. பஞ்சாபைச் சேர்ந்த 25 வயதான தச்சரின் மகள் அமன்ஜோத் கவுர், அதற்கு விரைந்து ஓடி வந்து, பந்தை மூன்று முறை தடுமாறி இறுதியாகப் பிடித்தார். இந்த வியத்தகு கேட்ச் மைதானத்தையும், இந்தியாவையும் ஆர்ப்பரிக்க வைத்தது. வோல்வார்ட் இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே நின்றார். அமன்ஜோத் தனது உறுதியுடன் அந்த கேட்சை உயிருக்கு நிகராகப் பிடித்தார். இதன் மூலம் வெற்றிப் பாதை தெளிவானது.

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த ஜெமிமா ரோட்ரிகஸின் அற்புதமான சதம்

ஜெமிமா ரோட்ரிகஸ் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ரன் சேசிங்குகளில் ஒன்றிற்குத் தலைமை தாங்கி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் குவித்த 127* ரன்கள், திறமையின் உச்சமாக அமைந்தது.

3வது வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா, இந்தியாவின் ஐசிசி கனவுகளைத் தடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சாதனை இலக்கை கடக்க வழிவகுத்து, தனது வாழ்நாள் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகு, குறிப்பாக ஸ்மிருதி மந்தனா அவுட்டான பிறகு, அவர் தனது சிறப்பான டெக்னிக், துல்லியமான போட்டி விழிப்புணர்வு மற்றும் அதிரடியான ஆட்டத்தால் இன்னிங்ஸை சீர்படுத்தினார். ஹர்மன்பிரீத் கவுருடன் அவர் அமைத்த 167 ரன் பார்ட்னர்ஷிப், இந்தியாவின் சாதனை ரன் சேஸுக்கு அடித்தளமாக அமைந்தது.338 ரன் என்ற சாதனை இலக்கை 5 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருக்க வெற்றிகரமாக சேஸ் செய்ய உதவியது.

ஹர்மன்பிரீத் கவுர் – கேப்டன்ஷி

பேட்டிங்கில் சற்று குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தினாலும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த முக்கியமான 89 ரன்கள் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. ஹர்மன்பிரீத்தின் உண்மையான தாக்கம் அவரது தலைமையில் தான் வெளிப்பட்டது. நாக்-அவுட் போட்டிகளின் அழுத்தமிகுந்த சூழலில் இந்தியாவுக்கு வழிகாட்டியாக நின்றார்.தொடரின் நடுப்பகுதியில் மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறழு விமர்சனங்களை சந்தித்த ஹர்மன்பிரீத், அமைதியான முறையில் தனது அணியை திரட்டினார். துணிச்சலான, ஊக்கமளிக்கும் தொடர்ச்சியான முடிவுகளின் மூலம் அணியை விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் மீண்டும் கட்டமைத்தார்.

ஜெமிமாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்த முடிவு – அப்போது பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அவரை 3வது வரிசைக்கு உயர்த்தியது இந்திய அணியின் பயணத்தையே மாற்றி அமைத்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகும். நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சதம், இறுதிப் போட்டியில் ஒரு முக்கிய ஆட்டம் என ஜெமிமாவின் பங்கு இந்திய அணியின் பேட்டிங் சுழன்று செழித்த ஒரு துருவமாக அமைந்தது.

நெருக்கடியான இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மாவுக்கு பந்துவீச வாய்ப்பளித்த உத்தி, அபாரமாக பலனளித்தது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் அழுத்தம் முழுவதும் ஹர்மன்பிரீத்தின் அமைதியான தலைமை ஒருபோதும் தளரவில்லை. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும், சரியான நேரத்தில் எடுத்த முடிவுகளால் அவர் அணியை ஒன்றாக வைத்திருந்தார்.

தீப்தி ஷர்மாவின் அதிரடியான ஆல்-ரவுண்டர் ஆட்டங்கள்

தீப்தி ஷர்மா தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். அதுவே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றாலும், அது அவரது பங்களிப்பின் பாதிதான். நாக்-அவுட் போட்டிகளில் அவர் குவித்த முக்கியமான ரன்களும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. இது இந்தியாவின் சாம்பியன் பட்ட வெற்றிக்கு உண்மையான சிற்பிகளில் ஒருவராக அவரை மாற்றி அமைத்தன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தீப்தி இரண்டு முறை ஆட்டத்தை மாற்றி அமைத்தார். முதலில், ஒரு நெருக்கடியான கடைசி ஓவர்களில் இரட்டை விக்கெட்டுகளை வீழ்த்தி, சுமார் 15-20 ரன்களை கட்டுப்படுத்தினார். பின்னர், , அதிரடியான 24 ரன்களைக் குவித்து இந்தியாவின் பரபரப்பான ரன் சேசிங்கை தடம்பிரழாமல் வைத்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், தீப்தி அதைவிட ஒரு படி மேலே சென்றார். 58 ரன்கள் குவித்து இந்தியாவை 250 ரன்களைக் கடக்க உதவினார். அதைத் தொடர்ந்து, அபாரமான 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இது ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் உலகக் கோப்பை வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆட்டங்களில் ஒன்றாகும்.

Story first published: Tuesday, December 23, 2025, 19:22 [IST]
Other articles published on Dec 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+