
இந்தியா மோசமான தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் சென்னையிலும் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி சென்னையில் இன்றைய தினம் முடிவுற்றுள்ளது. இதில் இந்திய அணி 227 ரன்களில் படுமோசமாக இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியுள்ளது.

13ம் தேதி துவக்கம்
அடுத்த போட்டியும் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விற்பனையும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற கடந்த 36 போட்டிகளில் 28 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

2ல் மட்டுமே தோல்வி
கடந்த 36 போட்டிகளில் 6 போட்டிகளை டிராவும் இன்றைய போட்டியுடன் சேர்த்து இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது இந்திய அணி. கடந்த 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பூனாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இன்றைய தினம் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

இமாலய சாதனை
இந்தியாவில் இந்திய அணியை வெற்றி கொள்வது என்பது மிகவும் கடினமான செயல்தான். இந்நிலையில் 227 ரன்களில் இந்தியாவை வெற்றி கொண்டுள்ள இங்கிலாந்து அணி இமாலய சாதனை செய்துள்ளதாக பெருமை பட்டுக் கொள்ளலாம். கேப்டன் ஜோ ரூட் இங்கிலாந்து பௌலர்களை சிறப்பாக பயன்படுத்தி இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications












