
8 டெஸ்ட் போட்டிகளில் 7ல் வெற்றி
கொல்கத்தாவில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய தனது முதல் பகலிரவு போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமின்றி, இந்த ஆண்டு இந்தியாவிற்கு மிகச்சிறந்த ஆண்டாக உள்ளது. தான் பங்கேற்ற 8 டெஸ்ட் தொடர்களில் 7ல் இந்தியா வெற்றி பெற்று, வெற்றி சதவிகிதமாக 87.5ஐ பெற்றுள்ளது.

விராத் கோலியின் தலைமை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரான் கோலியின் தலைமையில் இந்திய அணியின் வெற்றி - தோல்வி சதவிகிதம் 3.3ஆக உள்ளது. இந்த சதவிகிதத்தின் அடிப்படையில் இந்தியா சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ளது. தான் விளையாடிய 53 டெஸ்ட் போட்டிகளில் 33ல் வெற்றி கண்டுள்ளது இந்திய அணி.

இந்தியா முதலிடம்
தொடர்ந்து தான் பங்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 4ல் இன்னிங்க்ஸ் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த சாதனையை புரிந்துள்ள முதல் நாடு இந்தியா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பகலிரவு ஈடன் கார்டன் போட்டி
வங்க தேசத்திற்கு எதிரான பகலிரவு போட்டியில் சதத்தை அடித்ததன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 27வது சதத்தை கோலி பூர்த்தி செய்துள்ளார். இந்த சாதனையில் சச்சின் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் தற்போது கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி
கடந்த 2018ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக வங்கதேசத்திற்கு எதிராக நமது பௌலர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

பௌலிங் ஸ்டிரைக் ரேட் 26.3
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பௌலிங் சராசரி 13.48 புள்ளிகளாக இருந்தது. இது இந்தியாவின் இரண்டாவது சிறப்பான பௌலிங் வேகம் ஆகும். இதேபோல இந்த போட்டியில் இந்தியாவின் பௌலிங் ஸ்டிரைக் ரேட் 26.3ஆக இருந்தது.

இந்திய பௌலிங் சராசரி 16.28
வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சராசரி 54.06ஆக இருந்தது. வங்கதேசத்தின் பேட்டிங் சராசரி 15.66ஆக இருந்தது. இதேபோல வங்க தேசத்தின் பௌலிங் சராசரி 55ஆக இருந்த நிலையில் இந்தியாவின் பௌலிங் சராசரி 16.28ஆக காணப்பட்டது.

ஆஸ்திரேலியா இரண்டாவது இடம்
இந்த ஆண்டில் இந்திய பந்துவீச்சின் ஸ்டிரைக் ரேட் 31ஆக காணப்படுகிறது. இதில் இரண்டாவது இடத்தை 46.6 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த சாதனையாக காணப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் உமேஷ் யாதவ்
இதேபோல 2019ல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பௌலிங் சராசரி 13.14ஆக உள்ளது. அவரை தொடர்ந்து நமது வீரர்கள் உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி இரண்டாவது, 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் மயங்க்
இதேபோல இந்த ஆண்டில் நமது ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 754 ரன்களை குவித்து சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 778 ரன்களை குவித்து ஸ்டீவ் ஸ்மித் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications