Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா அதிரடி வெற்றி... இஷான், கோலி அரைசதம்... தொடரை சமன் செய்தது இந்தியா!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தியா இந்த போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 164 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

டி20 2வது போட்டி

டி20 2வது போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களை குவித்தது.

ரன்களை சுருக்கிய பௌலர்கள்

ரன்களை சுருக்கிய பௌலர்கள்

முதலில் இங்கிலாந்துக்கு அதிக ரன்களை இந்திய பௌலர்கள் அளித்த போதிலும் பிற்பகுதியில் ரன்களை சுருக்கினர். இதையடுத்து 180 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி 20 ஓவர்களையும் முழுமையாக விளையாடி 164 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா அதிரடி வெற்றி

இந்தியா அதிரடி வெற்றி

இதையடுத்து களமிறங்கி விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17.5 ஓவர்களில் இலக்கை வெற்றிகரமாக அடைந்து வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தினம் துவக்க வீரராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 56 ரன்களை குவித்தார்.

தொடரை சமன் செய்த இந்தியா

தொடரை சமன் செய்த இந்தியா

தொடர்ந்து ஆடிய விராட் கோலி, ரிஷப் பந்த் முறையே 73 ரன்கள் மற்றும் 26 ரன்களை குவித்தனர். இதையடுத்து இந்தியா 5 போட்டிகளை கொண்ட இந்த டி20 தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. முதல் போட்டியில் தடுமாற்றமான ஆட்டத்தை கொடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 14, 2021, 22:56 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+