Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாறு படைத்த இந்தியா..!! 5வது U-19 உலககோப்பையை வென்று சாதனை..!! துள்ளி குதித்த இளம் சிறுத்தைகள்..!!

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

U19 World cup India champion

இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. டாஸை இழந்த இந்திய அணி, இங்கிலாந்து விக்கெட்டுகளை விரைவில் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறஙகியது.

ரவிகுமார் அபாரம்

ரவிகுமார் அபாரம்

இங்கிலாந்து அணியின் பலமே, அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். அனைவரும் அதிரடியாக ஆட கூடியவர்கள். ஆனால் ரவிகுமார் தாம் வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலே ஜாக்கப் பெத்தல் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் டாம் பிரஸிட் ரவிகுமார் பந்துவீச்சில் டக் அவுட்டாகினார்.

ராஜ் பவா அசத்தல்

ராஜ் பவா அசத்தல்

18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தாலும், தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் ராஜ் பவா வீசிய பந்தை அடிக்க முயல, கேப்டன் யாஷ் துல்லிடம் பிடிப்பட்டு 27 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வில்லியம் லக்ஸ்டன் விக்கெட்டையும் ராஜ் பவா வீழ்த்தினார். இங்கிலாந்த அணி 47 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

189 ஆல்அவுட்

189 ஆல்அவுட்

7வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் ரூவ் மற்றும் ஜேம்ஸ் செல்ஸ் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜேம்ஸ் ரூஸ் 95 ரன்களில், கௌசல் தாம்பேவின் அபார கேட்ச் மூலம் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ராஜ் பவா 5 விக்கெட்டையும், ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து துணை கேப்டன் ஷேக் ரஷித் அபாரமாக விளையாடி அரைசதம் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் யாஷ் துல் 17 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து நிஷாந்த் சிந்து, ராஜ் பவா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ராஜ் பவா 35 ரன்களிலும், கௌசல் தாம்பே 1 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இறுதியில் நிஷாந்த் அரைசதம் அடித்தார். தினேஷ் பாவா 2 சிக்சர் விளாசி இந்திய அணியின் வெற்றியை 14 பந்துகள் எஞ்சிய நிலையில் உறுதி செய்தார். இதனையடுத்து இந்திய அணி 5வது முறையாக உலககோப்பையை வென்றது. இந்திய வீரர்கள் வெற்றியை துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடினர்.

Story first published: Sunday, February 6, 2022, 2:44 [IST]
Other articles published on Feb 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+