Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்ற இந்தியா.. 6.1 ஓவரில் எல்லாம் இலக்கை எட்டியது.. இலங்கை படுதோல்வி

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 8வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த இந்தியா 6.1 ஓவரில் எல்லாம் எட்டி சாதனை படைத்தது.

உலக கோப்பை தொடருக்கு முன் இப்படி ஒரு வெற்றியை இந்தியா பெற்று இருப்பது வீரர்களின் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் பேட்டிங்கும், பந்துவீச்சும் ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

India won the asia cup for 8th time and beat srilanka in 6.1 overs

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அயின் கேப்டன் ஷனாகா தாம் வாழ்நாளில் எடுத்த மிக பெரிய தவறாக முடிவாக இது இருந்தது. 250 ரன்களுக்கு மேல் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம் என நினைத்த ஷனாகாவின் கனவு பகல் கனவாக மாறிவிட்டது.

முதல் ஓவரிலேயே குசல் பெரேரா பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் 4வது ஓவரில் முகமது சிராஜின் அபார பந்துவீசசால் நிசாங்கா, சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செய்ய டிசில்வா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதே போன்று சிராஜ் தனது அடுத்த ஓவரில் குசேல் மெண்டீசை கிளின் போல்ட் ஆக்கினார். 12 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. வெல்லாலகே 8 ரன்களும், ஹேமந்தா 13 ரன்கள் சேர்க்க, ஒரு அளவுக்கு இலங்கை 30 ரன்களில் சுருண்டுவிடாமல் காப்பாற்றப்பட்டது.

இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவும் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் இணைந்த இஷான் கிஷன் அதிடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறைந்த பட்சம் 3 விக்கெட்டுகளையாவத எடுத்து விடலாம் என்று நினைத்த இலங்கை அணியின் கனவில் இந்த தொடக்க ஜோடி மண்ணை போட்டது. இஷான் கிஷன் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.

கில் 19 பந்தில் 27 ரன்கள் சேர்க்க, இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 6.1 வது ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 100 ஓவர்கள் ஆட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் 21 ஓவரில் எல்லாம் போட்டி முடிந்து ஆசிய கோப்பையை இந்தியா வென்றது. 263 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா வெறறி பெற்று இருக்கிறது. இத்தனை பந்துகள் பாக்கி இருந்த நிலையில் வென்றது இதுவே இந்தியாவுக்கு அதிகமாகும். இது ரோகித் சர்மாவுக்கு கேப்டனாக 2வது ஆசிய கோப்பையாகும்.

Story first published: Sunday, September 17, 2023, 18:20 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+