Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... ஷிகர் 98 ரன்கள்... பிரசித் 4 விக்கெட்கள்!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எதிரணிக்கு 318 என்ற இமாலய இலக்கை கொடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களை மட்டுமே அடித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்தியா 317 ரன்கள்

இந்தியா 317 ரன்கள்

போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் 98 ரன்களை அடித்தார். விராட் கோலி, க்ருணால் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் அரைசதங்களை அடித்த நிலையில், இந்தியாவின் ரன் 317 ஆக உயர்ந்தது. இதையடுத்து 318 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ்

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து ஆடிய நிலையில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி விக்கெட் இழப்பின்றி 135 ரன்களை எடுத்தனர். வெற்றி வாய்ப்பு இவர்களுக்கு அதிகமாக மாறிய நிலையில், ஜேசன் ராயின் விக்கெட்டை அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி விக்கெட்டுகள் கணக்கை துவக்கி வைத்தார்.

பௌலர்கள் அதிரடி

பௌலர்கள் அதிரடி

இதையடுத்து இங்கிலாந்துக்கு இறங்குமுகமாக போட்டி மாறியது. அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள், க்ருணால் பாண்டியா ஒரு விக்கெட் என இங்கிலாந்து அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து 251 ரன்களுக்கு 42.1 ஓவர்களிலேயே சுருண்டது.

66 ரன்களில் வெற்றி

66 ரன்களில் வெற்றி

இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அணியின் பேர்ஸ்டோ மட்டுமே அரைசதத்தை தாண்டிய நிலையில், மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்தியா அபாரமான பேட்டிங் மற்றும் பௌலிங்கை இந்த போட்டியில் வெளிப்படுத்தி வெற்றி கொண்டுள்ளது.

Story first published: Tuesday, March 23, 2021, 21:57 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+