Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிராக ஆரம்பமே வெற்றி…. டாசில் ஜெயித்த இந்தியா பேட்டிங்…!! கடின இலக்கை நிர்ணயிக்குமா..?

Recommended Video

டாஸ் வென்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

ஓவல்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

கிரிக்கெட் உலகின் அரசர் என்பதை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. மே மாத இறுதியில் துவங்கிய இந்த தொடரின் 14வது போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

India won the toss and choose to bat first against australia

லண்டனின் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த போட்டியில் விளையாடியே அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் களமிறங்க உள்ளனர். டாசில் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டி, ஆஸி. யை தோற்கடிக்கும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளன் மேஎக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் ஹேரி, நாதன் கவுட்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

Story first published: Sunday, June 9, 2019, 15:04 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+