For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி டி20 போட்டியில் இந்தியாவுக்கு அடிச்ச லக்.. ரிஷப் பண்ட் வெளியே.. பதிலடி தருமா ஆஸி

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றுவிடும்.

ஐதராபாத் அணி ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்

டாஸ்

கடைசியாக நடைபெற்ற 16 டி20 போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணி 8 முறையும், டாஸ் வென்று முதலில் பந்துவீசிய அணி 8 முறையும் வென்று இருக்கிறது. இதனால் இந்திய அணி சேஸிங் சிறப்பாக செய்யும் என்பதால், இந்தியா டாஸ் வென்றது சிறப்பான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்ட் நீக்கம்

ரிஷப் பண்ட் நீக்கம்

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இந்திய ணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் அடைந்த வெற்றி இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட ரோகித், இன்றைய ஆட்டத்தில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். '

ஆஸி. முதலில் பேட்டிங்

ஆஸி. முதலில் பேட்டிங்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வது நல்ல அனுபவமாக இருக்கும் என்று ரோகித்கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆரோன் பிஞ்ச், டாஸ் வென்று இருந்தால், தங்கள் அணியும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்து இருக்கும் என்றார். ஆஸி. அணியில் சென் அபாட்க்கு பதில் ஜாஸ் இங்கிலிஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ரோகித் சர்மா 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, புவனேஸ்வர் குமார், 9, பும்ரா, 10, சாஹல், 11,ஹர்சல் பட்டேல்

Story first published: Sunday, September 25, 2022, 18:53 [IST]
Other articles published on Sep 25, 2022
English summary
India won the toss and decided to bowl first in 3rd t20 vs aus கடைசி டி20 போட்டியில் இந்தியாவுக்கு அடிச்ச லக்.. ரிஷப் பண்ட் வெளியே.. பதிலடி தருமா ஆஸி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+