கிங்ஸ்டனின் ‘கிங்’ இந்தியா..! 257 ரன்களில் வெற்றி.. ஆனா அந்த விஷயம் சர்ச்சையாகிடுச்சே..!!
Recommended Video
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி இருக்கிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி கிங்க்ஸ்டனில் ஆகஸ்ட் முப்பதாம் தேதி தொடங்கியது.
அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா,416 ரன்களை குவித்திருந்தது. அதிகபட்சமாக விஹாரி 111 ரன்களை சேர்த்தார். இதுதான் விஹாரியின் முதல் சதம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயங்களில் ஒன்று. கோலி 76 ரன்களும், அகர்வால் 55 ரன்களும் எடுத்து அணியின் வலுவான நிலைக்கு உறுதுணையாய் இருந்தனர்

கடின இலக்கு
பின்பு, 416 ரன் என்ற கடின இலக்கை நோக்கி களம் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், ஆரம்ப நிலையிலேயே கடுமையாக தடுமாறியது. இறுயில் அந்த அணி வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆகையால், இந்தியா முதல் இன்னிங்சில் 299 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிக பட்சமாக பும்ரா ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

பாலோ ஆன் இல்லை
பின்னர் இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்சை தொடங்கியது. ராகுல் 6 ரன்களிலும், அகர்வால் 4 ரன்களிலும் புஜாரா 27 ரன்களிலும் கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.

இந்தியா டிக்ளேர்
அடுத்து வந்த ரகானேவும், விஹாரியும் நிலைத்து நின்று ஆடினர். 168 ரன்களாக எடுத்திருந்த நிலையில் தமது ஆட்டத்தை டிக்ளர் செய்தது இந்தியா. ரகானே 64 ரன்களுடனும் விஹாரி 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா வெற்றி
பின்னர் 2வது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ், எடுத்தது வெறும் 210 ரன்கள் தான். பரிதாபாமாக ஆல் அவுட்டானது. ஷமி மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

ரசிகர்கள் கேள்வி
இந்தியாவின் வெற்றி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்தியாவின் விஹாரி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆனால் தொடர் நாயகன் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. இது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications