Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்தியா புதிய சாதனை

மும்பை: இந்தியா, இலங்கை இடையே இன்று நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், சில புதிய வரலாறுகள் படைக்கப்பட்டன. சொந்த மண்ணில் வைத்து உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்றையும் இந்தியா படைத்தது.

Indian Players

- சொந்த மண்ணில் ஒரு நாடு உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா தனது நாட்டில் போட்டி நடந்த போது வெல்லவில்லை. மாறாக பிற நாடுகளில்தான்
அது வென்றது. அதேபோல 1996ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கை உலகக் கோப்பைப் போட்டியை முன்பு நடத்தியபோது கூட பாகிஸ்தானில் நடந்த இறுதிப் போட்டியில்தான் வெற்றி பெற்றது. அந்த வகையில் சொந்த மண்ணில் வைத்து உலக்க கோப்பையை வென்ற முதல் நாடு இந்தியாதான்.

- கெளதம் கம்பீர் இன்று ஒரு நாள் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்தார்.

- கேப்டன் டோணி ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்தார்.

- டோணியும், கம்பீரும் சேர்ந்து செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இதுவரை இந்தியா தகுதி பெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலேயே அதிகபட்சமான பார்ட்னர்ஷிப் இதுதான்.
Story first published: Thursday, June 7, 2012, 12:24 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+