தோனி சொன்னால் களத்திலேயே செத்துப் போவேன்..ஓவர் உணர்ச்சியைக் காட்டும் அஷ்வின்..
டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மரணமடையச் சொன்னால், களத்திலேயே அதைச் செய்வேன் என்று, சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஷ்வின் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள ஒரு நாள் இந்திய அணி கேப்டன் தோனிக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

தோனி மிகப்பெரிய நட்சத்திர வீரர் என்றும், அவர் நாட்டிற்காக பல சாதனைகளை செய்துள்ளார் என்றும் அஷ்வின் கூறியுள்ளார். நாட்டிற்காக தோனி செய்ததை நாம் மறக்கக்கூடாது என்றும், ஒட்டு மொத்த இந்திய அணியின் செயல்பாட்டுக்கு தோனியை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது எனவும் அஸ்வின் கூறினார்.
தன்னை களத்தில் மரணமடைய வேண்டும் என தோனி கூறினால், அப்போதே அதை செய்வேன் என்றும் அஷ்வின் உணர்ச்சிப் பொங்க தெரிவித்துள்ளார்.
இதே போன்று அணியின் மற்றொரு வீரர் சுரேஷ் ரெய்னாவும் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications