Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டீம் சூப்பர்... எந்த டீமையும் சீப்பா வீழ்த்திடுவாங்க... கிரேம் ஸ்வான்

லண்டன் : பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய பௌலர்கள், உலகின் எந்த அணியையும் மலிவாக வீழ்த்தும் வல்லமை படைத்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து ஆப் -ஸ்பின்னர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்திய பௌலர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட தொடரில் 40க்கு 33 விக்கெட்டுகளை அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை இங்கிலாந்து அணி குறைவாக மதிப்பிட்டு, மோசமான அணியை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணி குறித்து கிரேம் ஸ்வான்

இந்திய அணி குறித்து கிரேம் ஸ்வான்

இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான பௌலர்கள் உலகின் எந்த அணியையும் மிகவும் எளிதாக வீழ்த்தி விடுவார்கள் என்று முன்னாள் இங்கிலாந்து ஆப்-ஸ்பின்னர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் பௌலர்கள் 40க்கு 33 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியதை அவர் சுட்டிக் காட்டினார்.

வலிமையாக உள்ளது

வலிமையாக உள்ளது

இந்திய அணியின் பௌலிங் அட்டாக் மிகவும் வலிமையாக இருப்பதாகவும், அவர்கள் உலகின் எந்த அணியையும் மிகவும் மலிவாக வீழ்த்தி விடும் வல்லமை படைத்தவர்களாக உள்ளதாகவும் கிரேம் ஸ்வான் மேலும் கூறினார். அவர்களிடம் தோற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினர் தற்போது இங்கிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தவறான அணி தேர்ந்தெடுப்பு

தவறான அணி தேர்ந்தெடுப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியை இங்கிலாந்து அணி மிகவும் மலிவாக எடை போட்டுள்ளதாகவும் அதனால்தான் அவர்கள் தவறான அணியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கிரேம் ஸ்வான் கூறியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட்டை அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்காதது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

சிறந்த ரிசல்ட் கிடைக்க ஆலோசனை

சிறந்த ரிசல்ட் கிடைக்க ஆலோசனை

ஒரு நாளில் 25 ஓவர்களை போட்டாலும், அதில் ஒரு பந்தையும் தவறாக போடாத அளவில் திறன் மிக்கவர் ஸ்டூவர்ட் பிராட் என்றும் கிரேம் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரணியை வீழ்த்த வேண்டுமென்றால் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அப்போதுதான் சிறந்த ரிசல்ட் கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Thursday, July 16, 2020, 11:27 [IST]
Other articles published on Jul 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+