Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செய்தது நான், பாராட்டு வேறு ஒருவருக்கு..! ரவி சாஸ்த்ரியை கிழித்து தொங்கவிட்ட ரஹானே.. பரபரப்பு பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் ரஹானே எப்போதும் அமைதியாக காணப்படும், ஒரு பக்கா ஜெண்டில்மேன்.

டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த ரஹானே தனது பேட்டிங் பார்ம் காரணமாக அணியில் இடத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விமர்சனம், கிண்டல் செய்பவர்களையும் ரஹானே விட்டு வைக்கவில்லை.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

கடந்த 2020ஆம் ஆண்டு ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது, 2வது டெஸ்டிலிருந்து கேப்டன் பதவியை ஏற்று கொண்ட ரஹானே சதம் விளாசியதன் மூலம், தனது அருமையான கேப்டன்ஷிப் மூலம் தொடரை வென்று சாதனை படைத்தார். குறிப்பாக பிரிஸ்பேனில் 30 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்ந்தது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில், முதல் முறையாக தனியார் யூ டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த ரஹானே, ஆஸ்திரேலிய மண்ணில் நான் எப்படி செயல்பட்டேன், என்ன சாதனை படைத்தேன் என்று எனக்கு தெரியும்.களத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் நான் வியூகங்களை வகுத்து வெற்றியை கண்டேன், ஆனால் வேறு ஒருவர் அதற்கான பாராட்டுக்களை பெற்று கொண்டதாக கூறினார்.

ரவி சாஸ்த்ரி

ரவி சாஸ்த்ரி

ரஹானேவின் இந்த பதில் அவர் ரவி சாஸ்த்ரியை தான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக தெளிவாக தெரிகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றதற்கு காரணம் தன்னுடைய சாதனை என்று ரவி சாஸ்த்ரி தொடர்ந்து பேசி வந்தார். ரவி சாஸ்த்ரி எதுவும் செய்யவில்லை. யுத்திகளை நான் தான் வகுத்தேன் என்று ரஹானே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அணியில் குழப்பம்

அணியில் குழப்பம்

இதற்கு தற்போது ரவி சாஸ்த்ரி என்ன பதில் சொல்ல போகிறார் என்று தெரியவில்லை. ஆக மொத்தம், அணியில் ரவி சாஸ்த்ரி பயிற்சியாளராக இருந்த போது அணியில் பல சச்சரவு இருந்துள்ளது, தற்போது வீரர்கள் அளிக்கும் பேட்டியின் மூலம் தெரிகிறது.

Story first published: Thursday, February 10, 2022, 18:10 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+