
513 ரன்கள் இலக்கு
புஜாராவுடன் இணைந்த சுப்மான் கில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் 152 பந்துகள் எதிர்கொண்ட அவர் 110 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று புஜாராவும் சதம் விளாசினார். இதனை அடுத்து இந்திய அணி 258 ரன்கள் இரண்டு விக்கெட் இழந்து இரண்டாவது இன்னிசை டிக்ளேர் செய்தது. 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது.

நீண்ட காலம்
ஆட்ட நேரம் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. தன்னுடைய முதல் சதம் குறித்து பேசியுள்ள சுப்மான் கில், என்னை பொறுத்தவரை என்னுடைய முதல் சதத்தை எடுக்க நான் நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். இன்று நெருக்கடியான சூழ்நிலை விட்டு விலகி விளையாட வேண்டும் என நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் பில்டர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று அதற்கு ஏற்றார் போல் எனது இன்னிசை கட்டமைத்துக் கொண்டேன்.

மிகவும் நெருக்கமானது
மதிய உணவு இடைவேளையின் போது நான் 13 ரன்கள் எடுத்திருந்தேன். அப்போது நான் எனக்குள்ளே பேசிக் கொண்டேன். 100 பந்துகளை எதிர்கொள்ளும் போது நாம் 70 ரன்களை கடந்திருக்க வேண்டும் என கூறிக் கொண்டேன். இன்னிங்சை எப்படி கட்டமைத்து விளையாடுவது என்பது முக்கியம். ஒரு பேட்ஸ்மேன் ஆக எப்போது அதிரடியாக ஆட வேண்டும் எப்போது மெதுவாக விளையாட வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த சதம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

கோலியிடம் ஆலோசனை
எனது குடும்பம், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெஸ்ட் போட்டியில் நாட்டுக்காக முதல் சதம் விளாசுவது என்பது அனைத்து வீரர்களுக்குமே மிகவும் முக்கியமான தருணம் ஆகும். டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்காதது குறித்து நான் விராட் கோலியிடம் ஆலோசனை செய்தேன் என்று சுப்மான் கில் கூறினார். தற்போது முதல் சதம் சுப்மான் கில் அடித்துள்ளதால் அடுத்த போட்டியில் ரோகித் சர்மா வரும்போது யாரை அணியை விட்டு நீக்குவது என்ற தலைவலி ராகுல் டிராவிட்டுக்கு ஏற்படும்.


Click it and Unblock the Notifications










