இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக விலகல்.. IPL-ல் பங்கேற்பது சந்தேகம்
லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Recommended Video
கடந்த சில மாதங்களாக சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
தனி ஆளாக நின்று மேற்கிந்திய தீவிகளுக்கு எதிரான போட்டியில் ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

வீரர்களுக்கு ஓய்வு
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு நடுவரிசையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் காயம்
இந்த நிலையில், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார். இதில் அவருக்கு கையில் Hairline injury என்ற காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நீண்ட காலம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐபிஎல் சந்தேகம்
சூரியகுமார் யாதவ்-க்கு கையில் சிறிதளவு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் இன்று ஆய்வு செய்கின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் சூரியகுமார் யாதவ் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஒரு வேலை ஐபிஎல் தொடங்குவதற்குள் காயம் சரியாக வில்லை என்றால் மும்பை அணிக்கு அது பெரும் பின்னடைவாக ஏற்படும்.

யாருக்கு வாய்ப்பு
சூரியகுமார் விலகியுள்ளதால் மாற்று வீரரை இன்று பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வீரர் ஷாரூக்கான், மாயங் அகர்வால், சுப்மான் கில், ஷிகர் தவான் ஆகியோர்களில் எவரேனும் ஒருவர் இந்திய அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications