Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாக்குபோக்கே சொல்ல முடியாது... பேட்ஸ்மேன்கள் சிறப்பா விளையாடல... கோலி விளக்கம்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்திற்கு எதிராக நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தோற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் மட்டுமின்றி முன்னதாக விளையாடிய சர்வதேச ஒருநாள் தொடரையும் நியூசிலாந்திடம் இந்தியா இழந்துள்ளது.

Recommended Video

IND VS NZ TEST SERIES | Virat Kohli talks about test series loss

இந்நிலையில் போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகவும், ஆனால், அவர்களுக்கு ஈடுகொடுக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து -இந்தியா இடையிலான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு போட்டியிலும் 20 ரன்களைகூட எடுக்காத நிலையில், அவர் மற்ற பேட்ஸ்மேன்களை குற்றம் சாட்டியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு தொடர்களில் இந்தியா தோல்வி

இரண்டு தொடர்களில் இந்தியா தோல்வி

இந்தியா -நியூசிலாந்து இடையில் நடந்து முடிந்துள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

2 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி

2 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் இந்த ஆட்டம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் 10 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ள இந்தியா, தற்போது கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வது போட்டியிலும் படுதோல்யை கண்டுள்ளது. இரண்டு போட்டிகளும் 3வது நாளிலேயே நிறைவடைந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் எதிரணியான நியூசிலாந்திற்கு சிறிதும் 'டப்' கொடுக்காமல் சாவகாசமாக இந்தியா விளையாடியது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

விராட் கோலி விளக்கம்

விராட் கோலி விளக்கம்

இந்நிலையில் இரண்டு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். இரண்டு போட்டிகளிலும் பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை அளித்த போதிலும் போதிய ரன்கள் இல்லாததால் வெற்றி கைவசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சாக்குபோக்கு கூறமுடியாது

சாக்குபோக்கு கூறமுடியாது

சொந்த மண்ணை தவிர்த்து அன்னிய மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிரத்தையுடன் விளையாட வேண்டியதன் அவசியத்தை தற்போது இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், இதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பலவீனம்

இந்தியாவின் பலவீனம்

இந்தியாவின் பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக நியூசிலாந்து பயன்படுத்திக் கொண்டதாகவும், அதிலிருந்து மீளமுடியாமல் இந்தியா திணறியதையும் ஒப்புக்கொண்ட விராட் கோலி, எதிரணி கொடுத்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலை இரண்டு போட்டிகளிலும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, March 2, 2020, 14:58 [IST]
Other articles published on Mar 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+