விராட் கோலி மீது எழுந்த குற்றச்சாட்டு.. இனி எப்பவும் மிஸ் ஆகாது.. டிராவிட் உடன் சேர்ந்து பயிற்சி
டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் சொந்த மண் என்பதால், டெஸ்ட் கிரிக்கெட் விராட் கோலி சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீல்டிங்கில் கவனம்
ஆனால் டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பதை காட்டிலும் விராட் கோலி, இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரு துறைகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டாலும், ஸ்லிப் பீல்டிங் சுமாராகவே செயல்பட்டது. குறிப்பாக இரு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி இரு கேட்ச்களை விட்டது ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டது.

விராட் கோலிக்கு 2ம் இடம்
அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டுக்குப் பின் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை தவற விட்ட பீல்டர்களில் 26 வாய்ப்புகளில் 7 கேட்ச்களை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் இரண்டாவது இடத்தில் 14 வாய்ப்புகளில் 6 கேட்ச்களை மட்டுமே தவறவிட்டு விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

2 கேட்ச்கள்
இந்தியா போன்ற மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் போது பேட்ஸ்மேன்களின் பேட்டில் தட்டி, நேராக ஸ்லிப் பீல்டரிடம் அடைக்கலமாகும். ஆனால் ஸ்லிப்பில் நிற்கும் விராட் கோலி, கேட்ச்களை கோட்டவிடுவதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. கடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு கேட்ச்களை தவறிவிட்டிருந்தார்.

அஜிங்கியா ரஹானே
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேட்ச்களை தவறவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியில் ரஹானே இருந்தவரை, அவரே ஸ்லிப் பீல்டிங்கில் நிற்பார். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், முக்கிய பீல்டிங் பொசிஷனில் விராட் கோலி நின்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications