பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: தெ.ஆப்பிரிக்கா புறப்பட்டது இந்திய அணி
டெல்லி: நடைபெற உள்ள கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 17 பேர் கொண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 27ம்தேதி தொடங்கி, டிசம்பர் 9ம்தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. 40 ஓவர்கள் கொண்ட இந்த போட்டித் தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இதில் பங்கேற்க சேகர் நாயக் தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்றிரவு டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது. மத்திய அமைச்சர்கள் ஆனந்த்குமார் மற்றும் சர்பானந்த் சோனோவால் ஆகியோர் வீரர்களை வழியனுப்பி வைத்தனர். இந்திய அணி வெற்றிவாகை சூட அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Story first published: Tuesday, November 25, 2014, 12:54 [IST]
Other articles published on Nov 25, 2014


Click it and Unblock the Notifications