Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவர் பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர்.. ஆல் ஏரியாலயும் ஐயா கில்லி டா.. சிராஜை தொடர்ந்து ஷமி செய்த செய்கை

மொஹாலி: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில் பும்ரா, சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் ஆசியக் கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடினார். இதனால் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாமல் போனது. அதேபோல் ஷர்துல் தாக்கூர் மிடில் ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளையும் சிறப்பாக கைப்பற்றினார்.

Indian bowler Mohammad Shami picks 5 Wickets against Australia in the First ODI at Mohali

ஆனால் முகமது ஷமியை ஒப்பிடும் போது ஜூனியர் வீரரான சிராஜ் அவ்வளவு சிறந்த பந்துவீச்சாளர் இல்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்தார். இதனால் சிராஜ் அல்லது பும்ரா இருவரில் யாராவது ஒருவருக்கு ஓய்வு வழங்கப்பட்டால் மட்டுமே ஷமி களமிறங்க முடியும் என்ற நிலை வந்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிராஜிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் நீண்ட மாதங்களுக்கு பின் முகமது ஷமி மற்றும் பும்ரா இருவரும் இணைந்து களமிறங்கினர். இதில் பவர் பிளே ஓவர்களில் 4 ஓவர்களை வீசிய ஷமி வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் மிடில் ஓவர்களில் 4 ஓவர்களை வீசிய முகமது ஷமி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து கடைசி 2 ஓவர்களை டெத் ஓவர்களில் வீசினார். 47வது ஓவரை வீசிய ஷமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகளை விளாச, அடுத்த பந்திலேயே அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து 49வது ஓவரை வீச அழைக்கப்பட்ட நிலையில், ஷார்ட் மற்றும் அப்பாட் ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தினார். இதன் மூலம் 10 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 16 ஆண்டுகளுக்கு பின் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் கபில் தேவிற்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்று பெருமையை ஷமி பெற்றுள்ளார். கபில் தேவ் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், முகமது ஷமி 37 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதேபோல் சிராஜிக்கு சரிசமமாக விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதால், இந்திய அணி இவர்களை எப்படி பயன்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, September 22, 2023, 19:01 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+