Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத இந்திய அறிமுக வீரர் முகமது சிராஜ்!

ராஜ்கோட்: இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வென்று 1-1 என தொடரில் சமநிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் புதிதாக முகமது சிராஜ் என்ற வீரர் அறிமுகம் ஆனார். பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யக்கூடிய இவர் நெஹ்ராவின் இடத்தை நேற்று நிரம்பினார்.

இந்திய அணியில் நேற்று புதிதாக அறிமுகம் ஆன முகமது சிராஜ் களத்தில் இருக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார்.

 ஆட்டோ ஓட்டுநர் மகன்

ஆட்டோ ஓட்டுநர் மகன்

தெலுங்கானாவை சேர்ந்த இவர் 2015 இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் சிறப்பாக பந்து வீச கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில் மிக அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில், சன் ரைசர்ஸ் அணிக்காக 2.6 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டார். வலது கை பந்து வீச்சாளரான இவர் ஆட்டோ ஓட்டுநரின் மகன் என்பதும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தேசிய கீதத்தில் அழுதார்

தேசிய கீதத்தில் அழுதார்

இந்த நிலையில் நேற்று அவர் இந்திய அணிக்காக விளையாடினார். நெஹ்ராவுக்கு பதில் அவர் இந்திய அணியில் இடம்பிடித்தார். நேற்று அவர் களத்தில் நீல நிற ஆடையுடன் இறங்கிய போதே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தார். அணி வீரர்கள் வரிசையாக இந்திய தேசிய கீதத்திற்கு நிற்கும் போது அவர் மிகவும் உணர்ச்சி நிலையில் இருந்தார். தேசிய கீதம் ஆரம்பித்தவுடன் அவர் அழுக தொடங்கிவிட்டார். தற்போது இந்த புகைப்படம் இணையம் முழுக்க பரவி வருகிறது.

தேசிய கீத பிரச்சனை

இந்த நிலையில் அவர் தேசிய கீதத்திற்காக அழுதது தற்போது வைரல் ஆகி இருக்கிறது. மேலும் அவர் எந்த அளவுக்கு இந்தியாவையும், இந்திய அணியையும் மதித்தால் இப்படி அழுது இருப்பார் என நெட்டிசன்ஸ் பேசி வருகின்றனர்.

 அணியில் தொடர்வாரா

அணியில் தொடர்வாரா

இந்த நிலையில் நேற்று நியூசிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய முதல் போட்டியிலேயே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸின் விக்கெட்டை எடுத்து இருந்தாலும் இவர் மிகவும் அதிகமாக ரன் கொடுத்தார். 4 ஓவர்கள் போட்ட இவர் மொத்தம் 53 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 13.25 ரன்கள் இவர் கொடுத்து இருக்கிறார். இவரின் இந்த மோசமான ஆட்டத்தால் அடுத்த போட்டியில் இவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

Story first published: Sunday, November 5, 2017, 12:19 [IST]
Other articles published on Nov 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+