Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது முடியாது.. விரக்தியின் உச்சத்தில் அஸ்வின்.. திணறியபடி திரும்பிய பும்ரா.. டிரெஸ்ஸிங் ரூமில் பகீர்

சென்னை: இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பவுலிங் செய்து கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து இரண்டு நாட்களாக பேட்டிங் செய்து வருகிறது.

இதுவரை 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 555 ரன்களை எடுத்துள்ளது. இதுவரை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யாதது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.

எப்படி

எப்படி

அதிலும் இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இந்த போட்டியில் சிறப்பாக ஆடி உள்ளனர். கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர். போப் 34, பர்ன்ஸ் 33, பட்லர் 30 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியை இமாலய இலக்கை நோக்கி கொண்டு சென்றனர்.

மோசம்

மோசம்

இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் களத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் பேட்டிங் செய்தனர். அதிலும் ஜோ ரூட் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்தனர். சென்னை வெயிலில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பவுலிங் செய்தும், பீல்டிங் செய்தும் களைத்து போனார்கள்.

பரிதாபம்

பரிதாபம்

அதிலும் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் ஒவ்வொரு ஓவருக்கும் ஓடி ஓடியே உடைந்து போனார்கள். இந்தியாவில் முதல்முறை பும்ரா டெஸ்ட் ஆடுகிறார். முதல் போட்டியிலேயே தொடர்ச்சியாக மிக அதிக ஓவர்களை வீசி உள்ளார். இதற்கு இவர் ஒரே இன்னிங்சில் பும்ரா இவ்வளவு ஓவர்கள் வீசியது இல்லை.

எத்தனை

எத்தனை

பும்ரா 31, இஷாந்த் சர்மா 27, நதீம் 44, அஸ்வின் 50, சுந்தர் 26 ஓவர்களை இந்த இரண்டு நாட்களில் வீசி உள்ளனர். அதிலும் அஸ்வின் 50 ஓவர்களை சென்னை வெயிலில் வீசினார். இவர் லன்ச் பிரேக்கிற்கு பின்தான் அதிகமாக ஓவர்களை வீசினார். அப்படி என்றால் வெயிலில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்.

பரிதாபம்

பரிதாபம்

இதனால் நேற்று போட்டியில் பாதி ஆட்டத்திலேயே இந்திய வீரர்கள் விரகதியாகிவிட்டனர். இன்னும் எவ்வளவு நேரம் இவர்கள் ஆடுவார்கள். எவ்வளவு நேரம் பீல்டிங், பேட்டிங் செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர். அஸ்வின் எல்லாம் முகத்தில் விரக்தியை வெளிப்படையாக காட்டினார்.

வெளிப்படை

வெளிப்படை

இஷாந்த் சர்மா, பும்ரா இருவரும் பெவிலியன் செல்லும் போதே மிகவும் களைப்பாக திணறியபடியே நடந்து சென்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் நேரம் , கூடுதல் எனர்ஜியை செலவு செய்ததால் திணறினார்கள். இந்திய வீரர்கள் தற்போது உடல் ரீதியாக களைப்பாக உள்ளனர். இது அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூம்

டிரெஸ்ஸிங் ரூமில் பல வீரர்களை களைப்பாக கிடந்த சம்பவமும் புகைப்படமாக இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இன்று காலை மீண்டும் இந்திய வீரர்கள் புத்துணர்ச்சியோடு இறங்க வாய்ப்புள்ளது. இதை எதிர்கொண்டு இன்று இங்கிலாந்து அணிக்கு பவுலிங் செய்து இன்றே பேட்டிங் இறங்க வேண்டிய கட்டாயத்தில் வீரர்கள் உள்ளனர்.

Story first published: Sunday, February 7, 2021, 9:20 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+