Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஸ்கிரிப்ட்லயே இல்லை.. சின்ன பசங்களை சீண்டிய இங்கிலாந்து வீரர்கள்.. அதிர்ந்து போன கோலி!

சென்னை: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஆடி வரும் விதத்தை இந்திய கேப்டன் கோலி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. சென்னையில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் சிராஜ், குல்தீப் போன்றவர்கள் எடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அக்சர் பட்டேல் ஆடவில்லை. இதனால் அணியில் நதீம் இணைக்கப்பட்டு இருக்கிறார்.

மூன்று ஸ்பின் பவுலர்

மூன்று ஸ்பின் பவுலர்

இன்று மூன்று ஸ்பின் பவுலர்களை களமிறக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காலி செய்துவிடலாம் என்று இந்திய அணி நினைத்தது. இதனால் இந்திய கேப்டன் கோலி மூன்று ஸ்பின் பவுலர்களை களமிறக்கினார். அஸ்வின், சுந்தர், நதீம் ஆகிய மூன்று ஸ்பின் பவுலர்கள் இந்திய அணி சார்பாக இன்று களமிறங்கினார்கள்.

 எப்படி

எப்படி

முதலில் ஸ்பீட் பவுலர்களை பவுலிங் செய்ய வைக்கலாம். அதன்பின் வரிசையாக மூன்று ஸ்பின் பவுலர்களை போட செய்து விக்கெட் எடுக்கலாம் என்பதுதான் கோலியின் பிளானாக இருந்தது. மூன்று பேரை மாற்றி மாற்றி பவுலிங் செய்ய வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காலி செய்யலாம் என்று கோலி நினைத்தார்.

மோசம்

மோசம்

ஆனால் தோனி கொஞ்சம் கூட நினைக்காத அளவிற்கு மிகவும் சிறப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடினார்கள். சிப்லி, பர்ன்ஸ், ஜோ ரூட் என்று மூன்று பேருமே இந்திய ஸ்பின் பவுலர்களை நன்றாக எதிர்கொண்டார்கள். பிட்ச் பிரஷ்ஷாக இருப்பதை பயன்படுத்தி அதிரடியாக ஆட தொடங்கினார்கள்.

வெளுத்தனர்

வெளுத்தனர்

அஸ்வினின் பவுலிங்கில் பெரிய அளவில் அதிரடி காட்டாமல் அனுபவம் இல்லாத வீரர்கள் பவுலிங்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து வெளுத்தனர். நதீம், சுந்தர் ஓவர்களை குறி வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்தனர்.இவர்களின் ஓவரில் குறி வைத்து பவுண்டரிகளாக அடித்தனர்.

சின்ன

சின்ன

சின்ன பசங்களை குறி வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்தனர். இதனால் விக்கெட் எடுக்க முடியாமல் கோலி ஒரு கட்டத்தில் திணற தொடங்கினார். இதனால் தற்போது மாறி மாறி பவுலர்களை களமிறக்கி வருகிறார். ஆனால் இதுவரை இன்னும் விக்கெட் விழவில்லை.

Story first published: Friday, February 5, 2021, 17:35 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+