கோலிக்கு கிடைத்த முதல் "க்ளூ".. WTC ஃபைனலின் "டர்னிங் பாயிண்ட்" - "Top of Leg" குறி எடுபடுமா?
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஒரு முக்கிய விக்கெட்டை கைப்பற்றுவதற்கான மேலோட்டமான பதில் ஒன்று கிடைத்திருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்குகிறது.
இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சவுத்தாம்ப்டன் ஸ்டேடியத்தில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீரர்கள் பயிற்சிக்கு கிளம்புவார்கள் என்று தெரிகிறது.

5 சிங்கிள் டிஜிட்ஸ்
இதற்கிடையே இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், லண்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நியூசிலாந்து அணியில் அறிமுக வீரர் டெவோன் கான்வே இரட்டை சதம் (200) அடித்தும், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், 5 வீரர்கள் சிங்கிள் டிஜிட்டல் அவுட்.

போல்டு, எல்பிடபிள்யூ
இதில், இரண்டு இன்னிங்ஸிலும், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அடித்த மொத்த ரன்கள் 14 மட்டும். முதல் இன்னிங்ஸில் 13, இரண்டாவது இன்னிங்சீல் 1. இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆனால், இரண்டு இன்னிங்ஸிலும் அவரது பேட் சரியாக இயங்கவில்லை. அவர் அவுட்டானது பெரிய விஷயமல்ல. ஆனால், ஆண்டர்சன் ஓவரில் முதல் இன்னிங்ஸில் அவர் போல்டாக, இரண்டாவது இன்னிங்ஸில் ஓலே ராபின்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

விரைவில் அவுட்
அவ்வளவு விரைவில் அவுட் செய்ய முடியாத பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன். சீனியர் பவுலர் ஆண்டர்சன் ஓவரில் அவர் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார் என்றாலும், அறிமுக வீரர் ராபின்சன் வீசிய பந்தை அவர் பேடில் வாங்கியதைத் தான் கிரிக்கெட் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வளவு சாதாரணமாக அவர் தனது விக்கெட்டை இழந்திருக்கக் கூடாது என்பதும் அவர்களது பாயிண்ட்டாக உள்ளது.

கோலி கவனிப்பாரா?
ஒருவேளை கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இல்லையோ என்று கூட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பெரும் நிம்மதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதுவும் கோலிக்கு Value Added Offer போன்றது தான். முதல் இன்னிங்ஸில் கான்வே இரட்டை சதத்துக்கு பிறகு, நிகோலஸ் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். எனினும், பெரிய அளவில் கன்சிஸ்டன்சி இல்லாத நிகோல்ஸை அவுட் செய்வது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்காது.

லோ ஆர்டர் தடுமாற்றம்
ஒட்டுமொத்தமாக சீனியர் வீரர்களின் சொதப்பல், லோ ஆர்டரின் மெகா சொதப்பல் என்று நியூசிலாந்து அணி ஏகத்துக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இவர்கள் செயல்படலாம். அதேசமயம், ஓலே ராபின்சன் ஓவரில் கேன் அவுட்டான விதம், இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் ஒரு டானிக்காக அமையுமே என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, ஓலே ராபின்சன் வீசியது போன்று, துல்லியமான லைன் அன்ட் லெந்த்தில் Pad-ஐ நோக்கி கொஞ்சம் உயரமாக வீசினால், அதாவது 'Top of Leg' வீசினால், நிச்சயம் வில்லியம்சன் எனும் மீன் வலையில் சிக்க வாய்ப்புள்ளது என்ற க்ளூவும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications