Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடங்கியது "ஜம்போ" சவாரி... பவுலர்களைக் குறி வைக்கப் போகும் கும்ப்ளே!

பெங்களூரு: இந்திய பந்து வீச்சாளர்களை சிறப்பானவர்களாக மாற்றுவதே எனது முதல் வேலை. அவர்களை சிறந்த பந்து வீச்சாளர்களாக மிளிரச் செய்ய அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.

ஜம்போ என்று கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் செல்லமாக அழைக்கப்படும் கும்ப்ளே நேற்று தனது வேலையைத் தொடங்கி விட்டார். பெங்களூரில் நடந்த இந்திய அணியின் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொண்டு வீரர்களைச் சந்தித்துப் பேசினார். பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கும்ப்ளே. அப்போது தனது வேலை, தான் செயல்படப் போகும் விதம், தனது இலக்கு உள்ளிட்டவை குறித்து விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து...

அப்சர்வ் செய்வேன்

அப்சர்வ் செய்வேன்

வீரர்களை நான் முழுமையாக உன்னிப்பாக கவனித்து அவர்களிடம் என்ன முயற்சிக்கலாம் என்பதைப் பார்க்கப் போகிறேன். இப்போதைக்கு எனது முதல் கவனம் பந்து வீச்சாளர்கள்தான். அதைத்தான் நான் சற்று கவனிக்க வேண்டியுள்ளது.

அவர்களுக்கு என்ன தேவை

அவர்களுக்கு என்ன தேவை

அவர்களுக்கு என்ன தேவை, அவர்களை எப்படி மேம்படுத்துவது, அவர்களது திறமையை எப்படி முழுமையாக வெளிக்கொண்டு வருவது என்பது குறித்து பார்க்கப் போகிறேன். பந்து வீச்சில்தான் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.

தன்னம்பிக்கை தேவை

தன்னம்பிக்கை தேவை

பந்து வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை. அவர்கள்தான் லீடர்கள். எனவே அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகமாக்க முயற்சிப்பேன். அது இப்போதைய அவசியமாகவும் உள்ளது.

வீரராக இருந்தபோது

வீரராக இருந்தபோது

நான் ஒரு வீரராக இருந்தபோது பந்து வீச்சுக்கு நான்தான் கேப்டன் என்று எப்போதுமே எண்ணுவேன். அதைத்தான் இப்போது நமது பவுலர்களிடமும் சொல்லவுள்ளேன். அது முக்கியம். அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்

என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்

நான் வீரராக இருந்தேன். இப்போது பயிற்சியாளராகியுள்ளேன். பெரிய வித்தியாசத்தை உணரவில்லை. எப்போதும் பீல்டில் வீரர்கள்தான் செயல்படப் போகிறார்கள். நாங்கள் சப்போர்ட் டீம்தான். அதை நாங்கள் சிறப்பாகவே செய்வோம்.

நல்ல அனுபவம் கிடைக்கும்

நல்ல அனுபவம் கிடைக்கும்

இப்போதுள்ள வீரர்கள் சிலருடன் நான் விளையாடியுள்ளேன். வீரராக, மென்டாராக செயல்பட்டுள்ளேன். எனவே இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவது எளிதாகவே இருக்கும் என நம்புகிறேன் என்று கூறினார் கும்ப்ளே.

Story first published: Thursday, June 30, 2016, 14:15 [IST]
Other articles published on Jun 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+