Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை போலவே இந்திய பந்துவீச்சு அச்சுறுத்துகிறது -டிம் பெயின்

Recommended Video

IND Vs Aus Test Match Update | Australia Test Team Captain Tim Payne Speech About Indian Bowling

சிட்னி : இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெயின், இரண்டு வலிமையான அணிகள் மோதும் இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பந்துவீச்சு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள அவர், ஆஸ்திரேலியாவை போலவே இந்திய பந்துவீச்சு அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இந்தியா

ஆஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இந்தியா

கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட் போட்டித் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக இந்தியா இந்த வெற்றியை பெற்றுள்ளது.

டிசம்பரில் நடைபெறுகிறது

டிசம்பரில் நடைபெறுகிறது

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 சுவாரஸ்யமாக இருக்கும்

சுவாரஸ்யமாக இருக்கும்

இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெயின், இந்தியா -ஆஸ்திரேலியா என இரண்டு வலிமையான அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டிம் பெயின் நம்பிக்கை

டிம் பெயின் நம்பிக்கை

கடந்த ஆண்டில் இரு அணிகளும் மோதிய டெஸ்ட் போட்டிகளை போலல்லாமல் டிசம்பரில் நடைபெறவுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் வலிமையான முகத்தை இந்தியா காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய பந்துவீச்சு அச்சுறுத்துகிறது

இந்திய பந்துவீச்சு அச்சுறுத்துகிறது

ஆஸ்திரேலியாவை போலவே இந்தியாவின் பந்துவீச்சும் கடந்த ஆண்டுகளில் அச்சுறுத்தும்வகையில் உள்ளதாகவும் டிம் பெயின் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 7, 2020, 19:16 [IST]
Other articles published on Jan 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+