இறுதி நேரத்தில் அதிரடி ஆட்டம்... மராத்தியில் வாழ்த்து தெரிவித்த கேப்டன்...

கட்டாக்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் கேப்டன் விராட் கோலி 85 ரன்களை அடித்த நிலையில் ஆட்டமிழக்க, போட்டியை ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் சிறப்பான வெற்றியுடன் முடித்து கொடுத்தனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஷர்துல் தாக்கூருக்கு மராத்தி மொழியில் வாழ்த்துக்களை கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ரோகித், ராகுல், விராட் கோலி அபாரம்

ரோகித், ராகுல், விராட் கோலி அபாரம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் மற்றும் விராட் கோலி முறையே, 63, 77 மற்றும் 85 ரன்களை அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிக்ஸ், பவுண்டரிகள் விளாசல்

சிக்ஸ், பவுண்டரிகள் விளாசல்

இந்த போட்டியில் 85 ரன்களை அடித்து கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்க 30 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து இறுதிநேர பார்ட்னர்ஷிப்பில் அணியை வெற்றிபெற வைத்தனர். இருவரும் சிக்ஸ், பவுண்டரிகளை விளாசி தள்ளினர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல்

இந்த போட்டியில் எட்டாவது ஆட்டக்காரராக களமிறங்கிய பௌலர் ஷர்துல் தாக்கூர், 6 பந்துகளில் 17 ரன்களை அடித்தார். ஒரு சிக்ஸ் மற்றும் 2 பவுண்டரிகளை அவர் அடித்து இறுதி நேரத்தில் பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மராத்தியில் பாராட்டிய கேப்டன்

இந்நிலையில் குறைந்த பந்துகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூருக்கு டிவிட்டர் மூலம் கேப்டன் விராட் கோலி தனது பாராட்டுக்களை மராத்தியில் தெரிவித்துள்ளார்.

விராட், ஷர்துலுக்கு பாராட்டு

கோலியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், கேப்டன் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரையும் பாராட்டித் தள்ளினர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli praises Young Cricketer Shardul Thakur In Marathi
Story first published: Monday, December 23, 2019, 12:38 [IST]
Other articles published on Dec 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X