For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலின்னாலே எப்பவுமே கிங்குடா.. டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்!

டெல்லி : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள கேப்டன் விராட் கோலி, மீண்டும் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் கோலியை விட ஐந்து புள்ளிகள் மட்டுமே குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ்ஸ்மித், பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரன்கள் அடிக்க தவறியதால் புள்ளிகளில் மேலும் கீழிறங்கியுள்ளார். ஆயினும் இரண்டாவது இடத்தை அவரும் தக்க வைத்துள்ளார்.

இதனிடையே நியூசிலாந்திற்கு எதிராக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 முதலிடத்தை தக்கவைத்த கோலி

முதலிடத்தை தக்கவைத்த கோலி

ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி, 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

 புள்ளிகள் குறைந்த ஸ்டீவ்

புள்ளிகள் குறைந்த ஸ்டீவ்

கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் விராட் கோலியைவிட ஐந்து புள்ளிகளே குறைந்து இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிகளில் குறைவான ரன்களே அடித்ததால் மேலும் புள்ளிகள் குறைந்துள்ளார். ஆயினும் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.

 5வது இடத்திற்கு முன்னேற்றம்

5வது இடத்திற்கு முன்னேற்றம்

இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே இரண்டு இன்னிங்சிலும் முறையே 143 மற்றும் 50 ரன்களை குவித்து தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சக வீரர் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி இவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

 4வது இடத்தில் புஜாரா

4வது இடத்தில் புஜாரா

இந்நிலையில் 864 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் இந்திய வீரர் சத்தேஷ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

 பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் சாதனை

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் சாதனை

இதேபோல பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து தரவரிசையில் 4 இடங்களில் முன்னேறி 9வது இடத்தை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பிடித்துள்ளார்.

 இரண்டாவது இடத்தில் ரபடா

இரண்டாவது இடத்தில் ரபடா

பௌலிங்கில் ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 898 புள்ளிகளுடன் முதலிடத்தையும் 839 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபடா இரண்டாவது இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துள்ளனர். பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வான மிட்செல் ஸ்டார்க் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Story first published: Tuesday, December 17, 2019, 12:50 [IST]
Other articles published on Dec 17, 2019
English summary
Kohli Retains his 1st position in ICC Test Rankings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+