
சிக்கல் தீர்ந்துவிடும்
ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் எங்கள் அணியில் கீழ்வரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. காயமடைந்த வீரர்கள் அணிக்குள் வந்ததும் அந்த சிக்கல் தீர்ந்துவிடும் என நம்புகிறேன்

ஆல் ரவுண்டர்
நாங்கள் பேட்டிங்கில் ஆறாவதாக இறங்கும் நபர் பந்துவீசக் கூடிய நபராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு தான் வெங்கடேஷ் ஐயரை தயார்ப்படுத்த நினைத்தோம். அவர் ஐ.பி.எல். தொடரில் தொடக்க வீரராக இருந்தாலும், மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் போது நடுவரிசையிலேயே களமிறங்குவார். முதல் போட்டியில், அவர் பந்துவீச வேண்டிய நிலை ஏற்படவில்லை. தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கி தயார்படுத்துவோம்

டிராவிட் விளாசல்
ஆட்டத்தின் 30வது ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க தவறிவிட்டோம். சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இந்த இடத்தில் பிரச்சினை இருக்கிறது. அதனை சரி செய்வோம். இதே போன்று பேட்ஸ்மேன்கள் சிலர் அறிவில்லாத ஷாட்களை ஆடி தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனையும் சரி செய்ய வேண்டும்.

பாராட்டு
கே.எல்.ராகுல் கேப்டனாக முதல் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார் என்று கருதுகிறேன். இது அவருக்கு முதல் தொடர் என்பதால் அவர் இன்னும் அனுபவத்தை திரட்டி கொள்வார். இந்த தோல்வி எங்களது கண்களை திறந்துவிட்டது. தவறுகளை திருத்தி, அடுத்த தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.தீபக் சாஹர், சர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டர்களாக சிறப்பாக செயல்பட்டனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது


Click it and Unblock the Notifications











