Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தூங்கி வழிந்த கோச் ரவி சாஸ்திரி... எழுப்பி விட்ட ஹர்பஜனின் குசும்பு!

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி தூங்கினார். அவரை கிண்டல் செய்து எழுப்பி விட்டார் ஹர்பஜன் சிங்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நேற்று துவங்கியது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

Indian coach ravi shastri seen sleeping

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தான் ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியது. அப்போது, இந்திய அணியின் கோச் ரவி சாஸ்திரி கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தார்.

அதை, டிவியில் வர்ணனை அளித்து வரும் ஹர்பஜன் சிங், பார்த்து விட்டார். உடனே, எழுந்திருங்க ரவி என்று கூறியுள்ளார். ஆனால், ரவி சாஸ்திரி கண்ணை திறக்கவில்லை.

அப்போது ரவி சாஸ்திரிக்கு அருகில் இருந்த உதவி கோச் சஞ்சய் பாங்கரிடம், ரவியை எழுப்பி விடுங்க என்று ஹர்பஜன் சிங் கமெண்டரியில் கூறினார். அதைக் கேட்டு சஞ்சய் பாங்கர் விழுந்து விழுந்து சிரித்தார். அப்போது கண் முழித்த ரவி சாஸ்திரியிடம், தூங்கி வழிந்த கதையை சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். ரவி சாஸ்திரி சிரித்து மழுப்பினர்.

பின்னர் ஹர்பஜனை சந்தித்தபோது, தூங்கவில்லை, தியானம் செய்து கொண்டிருந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 2, 2018, 13:25 [IST]
Other articles published on Aug 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+