ஒருவழியா டும் டும் டும்.. ‘லார்ட்’ ஷர்துல் தாக்கூரின் திருமண தேதி அறிவிப்பு..எங்கு?எப்போது தெரியுமா?
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷர்துல் தாக்கூர். இவர் தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான தொடரில் கூட இந்திய அணியின் முன்னணி பவுலராக செயல்பட்டு வருகிறார்.

ஷர்துல் தாக்கூர் திருமணம்
இந்நிலையில் இவர் வாழ்கையின் அடுத்தக்கட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 31 வயதாகும் ஷர்துல் தாக்கூரும், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மித்தாலி பருல்கர் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து பின்னர் காதலை வெளிப்படுத்தி கொண்டவர்கள். ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முன்பே காதலித்த இவர்கள் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண தேதி அறிவிப்பு
இந்தாண்டு டி02 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று திருமணம் நடைபெறவுள்ளதாக மணப்பெண் மித்தாலியே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

திருமணம் எங்கு
மித்தாலி பருல்கர் என்பவர் மும்பையில் ஆல் தி பேக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ஆகும். இந்த திருமண நிகழ்ச்சிகள் முதலில் கோவாவில் நடைபெறுவதாக இருந்த சூழலில் போக்குவரத்து ஏற்பாடுகள் பிரச்சினை காரணமாக மும்பையிலேயே நடைபெறவுள்ளது. இதற்காக 250 நபர்கள் வரை பங்கேற்கும் வகையில் அழைப்புகள் விடுக்கப்படுவதாக மித்தாலி கூறியுள்ளார். ஷர்துல் தாக்கூருக்கு பிப்ரவரி 25ம் தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. எனவே அவற்றை முடித்துக்கொண்டு நேராக திருமணத்திற்கு செல்லவுள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் வாழ்க்கை
கடந்த 2017ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாக்கூர் இதுவரை 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 25 டி20 போட்டிகளில் 33 விக்கெட்களும், 8 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். வரும் காலங்களில் முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களின் இடங்களை ஷர்துல் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications