Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டும் டும் டும்.. கோலாகலமாக நடந்த ஷர்துல் தாக்கூர் திருமணம்.. கலைநிகழ்ச்சியில் ஸ்ரேயாஸ் தந்த ட்விஸ்ட்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரின் திருமண விழாவில் நட்சத்திர வீரர்கள் கலை நிகழ்ச்சியையே நடத்திய வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷர்துல் தாக்கூர். இவர் தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்.

சமீபத்தில் கே.எல்.ராகுல், அக்‌ஷர் பட்டேல் என அடுத்தடுத்து கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ள சூழலில் ஷர்துல் தாக்கூரும் தற்போது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

காதல் பயணம்

காதல் பயணம்

31 வயதாகும் ஷர்துல் தாக்கூரும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மித்தாலி பருல்கர் என்பவரும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்து பின்னர் காதலை வெளிப்படுத்தி கொண்டவர்கள். ஷர்துல் தாக்கூர் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முன்பே இவர்களின் காதல் பயணம் தொடங்கிவிட்டது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற சூழலில் டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் திருமணம் நடைபெறவிருந்தது. எனினும் தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப்போனது.

 திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

இந்நிலையில் இன்று ஷர்துல் - மித்தாலி ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிகள் முதலில் கோவாவில் நடைபெறுவதாக இருந்த சூழலில் போக்குவரத்து ஏற்பாடுகள் பிரச்சினை காரணமாக மும்பையிலேயே நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஷர்துலின் நெருங்கிய நண்பர்களான ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

நண்பர்களுக்கான விருந்து நிகழ்ச்சியின் போது, மேடையில் திடீரென ஏறிய ஸ்ரேயாஸ் ஐயர் திருமண ஜோடிக்காக காதல் பாடல்களை பாடினார். இதனை கேட்ட ஷர்துல் தாக்கூர் மகிழ்ச்சியில் தனது காதல் மனைவி மித்தாலியுடன் மிக அழகாக நடனம் ஆடினார். வெட்கத்தில் இருவரின் முகமும் மலர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

தேனிலவு பாதிப்பு

தேனிலவு பாதிப்பு

திருமணம் நடைபெற்றுள்ள போதும் அவர்கள் நீண்ட சுற்றுப்பயணத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக தேர்வாகியுள்ள ஷர்துல் தாக்கூர் குறைந்தபட்சம் மார்ச் 13ம் தேதிக்குள் இந்திய அணியுடன் இணைய வேண்டியது அவசியமாகும்.

Story first published: Monday, February 27, 2023, 15:23 [IST]
Other articles published on Feb 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+