Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவேளை ஷேவாக் கோச்சாக வந்தால் என்னவாகும்?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான கும்ப்ளேவாலேயே இந்திய கிரிக்கெட் அணியில் தாக்குப்பிடிக்க முடியவில்லையே அதிரடி காட்டும் ஷேவாக் வந்தால் என்னாகுமோ என யோசிக்க தொடங்கியுள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை நேற்று ராஜினாம செய்தார்.

தனது பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க விண்ணப்பித்திருந்தார் கும்ப்ளே. இதற்கு பிசிசிஐயையும் வரவேற்பு தெரிவித்திருந்தது.

கோஹ்லியால் ராஜினாமா

கோஹ்லியால் ராஜினாமா

இந்நிலையில் விராட் கோஹ்லியின் எதிர்ப்பு மற்றும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கிரிக்கேட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மென்மையானவர் கும்ப்ளே

மென்மையானவர் கும்ப்ளே

கும்ப்ளே மற்றவர்களிடம் பழகுவதில் மென்மையானவர், தொழில் ரீதியாகவும் மக்களின் மனதை கணிப்பதிலும் டெக்னிக் தெரிந்தவர். எதையும் நாசூக்காக சொல்லிக் கொடுப்பவர். நயமாக பேசி வழிக்கு வரவைக்கக் கூடியவர்.

பலவீனங்களை கணிக்கக்கூடியவர்

பலவீனங்களை கணிக்கக்கூடியவர்

எதிராளிகளை சரியாக கணித்து அவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து சரியாக கணிக்கக்க கூடியவர். உலகின் அனைத்து மைதானங்களிலும் விளையாடிவர்.

ஷேவாக்குடன் எப்படி?

ஷேவாக்குடன் எப்படி?

இவரையே சமாளிக்க முடியாத கோஹ்லி.. ஷேவாக் போன்றோர் வந்தால் எப்படி சமாளிப்பார்? என ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த பயிற்சியாளராக ஷேவாக்கின் பெயர் பரிசீலனையில் உள்ள நிலையில் இந்த கேள்வி எழுந்துள்ளது.

ஷேவாக் என்றாலே அதிரடி

ஷேவாக் என்றாலே அதிரடி

பொதுவாகவே ஷேவாக் என்றாலே அதிரடி ஆட்டக்காரர் என்பதும் அவரின் அதிரடிகளும்தான் நினைவுக்கு வரும். விளையாட்டில் மட்டுமல்ல டிவிட்டர் முதல் அனைத்திலும் அதிரடியைதான் காட்டி வருகிறார் ஷேவாக்.

அதிரடி ஆட்டம் மட்டுமே அறிந்தவர்

அதிரடி ஆட்டம் மட்டுமே அறிந்தவர்

ஷேவாக் கோபக்காரர், கும்ப்ளே அளவுக்கு பொறுமையானவர் அல்ல. அதிரடி ஆட்டம் மட்டுமே அறிந்தவர். பெரிய அளவில டெக்னிக்கல் வீரர் என்று கூற முடியாது. இவரிடம் எப்படி கோஹ்லி ஒத்துப் போக முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷேவாக்கிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?

ஷேவாக்கிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?

பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு டீமில் சண்டையிருந்த போதும் கொஞ்சமும் மரியாதை குறையாமல் கோஹ்லியை கேப்டன் என்றே அழைத்துள்ளார் கும்ப்ளே. யாராக இருந்தாலும் சரிதான் போடா என தூக்கி அடித்துவிட்டு வரும் ஷேவாக்குடன் எப்படி கோஹ்லி ஒத்து போக போகிறார்? கும்ப்ளேவின் அமைதியையும் பெருந்தன்மையையும் ஷேவாக்கிடம் எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே

Story first published: Wednesday, June 21, 2017, 12:25 [IST]
Other articles published on Jun 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+