இந்திய அணிக்கு ஜெயமுண்டாகட்டும்... சிறப்பு பூஜை நடத்திய கிரிக்கெட் ரசிகர்கள்!
போபால்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என கிரிக்கெட் ரசிகரகள் சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய வீரர்கள் அவசரம் காட்டாமல் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர். அதன்படி, மும்பை சித்தி விநாயகா கோவிலில் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினர்.
இந்த பூஜையில் உலகக் கோப்பை மாடல் ஒன்று வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என இந்தப் பூஜையில் கலந்து கொண்ட ரசிகர்கள் மனமுருகி வேண்டிக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications