Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது உங்களுக்கு தேவையா.. ஹர்திக் பாண்டியாவை வம்பிழுத்த பாக். நடிகை.. வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்!

மொஹாலி: இந்தியாவின் தோல்வி குறித்து பாகிஸ்தான் நடிகை கேலி செய்ததால் அவரை ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்களை அடித்த போதும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் சேஹர் ஷின்வாரி சர்ச்சையான கருத்தை பதிவிட்டிருந்தார்.

பாண்ட்யாவின் ட்வீட்

பாண்ட்யாவின் ட்வீட்

நேற்றைய போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டரில் " நாங்கள் கற்றுக்கொள்கிறோம், சரிசெய்துக்கொள்கிறோம், எங்களுக்காக ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி" எனக்கூறியிருந்தார். இவர் அந்த போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்களை குவித்திருந்தார்.

நடிகையின் கமெண்ட்

நடிகையின் கமெண்ட்

இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்திருந்த சேஹர் ஷின்வாரி" அக்டோபர் 23ம் தேதி நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடன் தோல்வியை பெற்றுவிடுங்கள். அப்போதும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வீரர்கள் என கிண்டலாக பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் நிலை

பாகிஸ்தானின் நிலை

நடிகை இப்படி ஒரு ட்வீட்டை போட, மறுபுறம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக திணறி வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனை குறிப்பிட்டு ஷின்வாரியை இந்திய ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

சொந்த மண்ணில் பாகிஸ்தான் பலத்த அடியை வாங்கி வருகிறது. இப்படி இருக்கையில் எங்களை சொல்ல வந்துவிட்டீர்கள் என விமர்சித்துள்ளனர். மற்றொரு ரசிகர், " உங்களது நாட்டில் ஒரு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த அதே வேளையில் இந்திய போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துள்ளீர்களே, அதுதான் இந்தியாவின் தரம் என பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Wednesday, September 21, 2022, 19:40 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+