Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் விளையாடினால் மட்டும் இனிச்சிதோ? இந்திய வீரர்களை கிழித்து தொங்கவிட்ட கவாஸ்கர்..சம்பளம் எதற்கு?

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால் தான் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதில்லை என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சிலர் ஐபிஎல் மூலம் இளம் வீரர்கள் நிறைய பேர் வருகிறார்கள். இதனால் ஐபிஎல் போட்டிகளை குறை சொல்லக்கூடாது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஐபிஎல் போட்டி குறித்து பேசிய கருத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கவாஸ்கர் கேள்வி

கவாஸ்கர் கேள்வி

இது குறித்து பேசி அவர், தற்போது நியூசிலாந்து தொடருக்கு இந்திய அணி செல்கிறது. அந்த அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வீரர்களின் பணிச்சுமை காரணமாக சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் ஐபிஎல் தொடர் முழுவதையும் ஓய்வின்றி விளையாடுகிறீர்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் போது உங்களுக்கு களைப்பாக இருந்தது இல்லையா?

பணிச்சுமை இல்லையா?

பணிச்சுமை இல்லையா?

அப்போது மட்டும் பணிச்சுமை உங்களுக்கு கிடையாதா? அது ஏன் இந்தியாவுக்காக விளையாடும்போது மட்டும் உங்களுக்கு பணிச்சுமை நினைவுக்கு வருகிறது. கவர்ச்சிகர தொடர்களில் மட்டும் சீனியர்கள் விளையாடுவது தவறு கிடையாதா? நீங்கள் முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது பணிச்சுமை என்ற கேள்வி எப்படி வரப் போகிறது? முதலில் வீரர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்.நீங்கள் அணியில் தேர்வு செய்யப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு தனி ஊதியம் கிடைக்கிறது.

எதற்கு சம்பளம்?

எதற்கு சம்பளம்?

உங்களால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்றால் எதற்கு பிசிசிஐ இடம் இருந்து சம்பளம் வாங்குகிறீர்கள். நீங்கள் வீரர்களிடம் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் உங்களுக்கு ஆண்டு சம்பளம் கிடையாது என்று கூறுங்கள்.அப்போது எத்தனை வீரர்கள் தொடர்களில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார்கள் என்று நாம் பார்ப்போம். உங்கள் அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார்.

எதற்கு இத்தனை பேர்?

எதற்கு இத்தனை பேர்?

அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.அவர் அணியில் இருக்கும் போது தனியாக பேட்டிங் என பயிற்சியாளர் எதற்கு? டிராவிட் ஒன்று சொல்லுவார் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ராத்தோர் ஒன்று சொல்லுவார். இதனை கேட்கும் போது பேட்ஸ்மேன்கள் குழம்பி விடுவார்கள். யார் சொல்வதை கேட்க வேண்டும் என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். முக்கியமான நபர்களை மட்டும் வீரர்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

குழப்பம் ஏற்படும்

குழப்பம் ஏற்படும்

இத்தனை பேர் தேவையில்லை. நாங்கள் 1983 உலக கோப்பையை வெல்லும் போது எங்களுக்கு ஒரே ஒரு மேனேஜர் மட்டும் தான் இருந்தார். ஆனால் இப்போது எல்லாம் வீரர்களை விட அணி நிர்வாகிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இதனால் வீரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும் என்று கவாஸ்கர் கூறினார்.

Story first published: Monday, November 14, 2022, 12:39 [IST]
Other articles published on Nov 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+