“2 நாள் முன்னாடி இத செய்யுங்க ரோகித்”.. பாகிஸ்தான் பயத்தில் பதறும்.. முன்னாள் வீரர் சூப்பர் அட்வைஸ்!
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வரும் 28ஆம் தேதி பாகிஸ்தான் உடன் முதல் போட்டியில் விளையாடுகிறது.
Recommended Video
இந்த போட்டியில் இந்திய அணி எந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் எந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்காது என்று குழப்பம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஒரு வினோத அறிவுரையை வழங்கியுள்ளார்.

கெயிஃப் அட்வைஸ்
அது குறித்து தற்போது காணலாம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா களமிறங்கும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. எப்போதும் டாஸ்க்கு முன்பு தான் பிளேயிங் லெவன் குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆனால் இம்முறை இந்திய அணி , போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் இந்த வீரர்களை வைத்து தான் விளையாட போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

மைண்ட் கேம் இல்லை
காயம் ஏதும் ஏற்படாத வரை அறிவித்த வீரர்களை வைத்து பாகிஸ்தானை சந்திக்க வேண்டும். இது மைண்ட் கேம் எதுவும் கிடையாது, நாங்கள் எதிரணியை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்புவதற்காகத்தான் நான் இதை செய்ய சொல்கிறேன். கடந்த முறை டி20 உலக கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் ஒரு நாள் முன்பே பிளேயிங் லெவனை அறிவித்தது .நாங்கள் உங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று சொல்லாமல் சொன்னது.

குழப்பம் கூடாது
இதையே நாம் திரும்பிச் செய்ய வேண்டும். நாம் கண்டிப்பாக போட்டியை வென்றே ஆக வேண்டும். அதற்கு முதலில் நாம் அணியில் இருக்கிறோமா இல்லையா என்று வீரர்களுக்குள் குழப்பம் இருக்கக் கூடாது. அதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்தால் வீரர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். கடந்த முறை பாகிஸ்தானிடம் நாம் தோற்றோம். அதற்கு இம்முறை பதிலடித் தர நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கைஃப் கூறியுள்ளார்.

கெயிஃப் கருத்து சரியா
கெயிப் கூறிய கருத்து கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால் இது இரண்டு பக்கமும் சுடும் துப்பாக்கி போல் நமக்கும் தீங்காக போய் முடிய வாய்ப்பு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிளேயிங் லெவலை அறிவித்தால் பாகிஸ்தான் அணி அதற்கு தகுந்தார் போல் யுத்திகளை அமைத்து களமிறங்கும். குறிப்பாக எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீசுவது? எந்த பந்துவீச்சாளரை எப்படி எதிர்கொள்வது ?போன்ற யுக்திகளை பயிற்சி எடுக்க நாமே வாய்ப்பு தருவது போல் ஆகும். போட்டித் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு அறிவித்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக நமது உத்வேகம் எதிரணிக்கு பயத்தை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications