Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மட்டையை விட்டுட்டு தோசையை ஒரு பிடி, பிடிக்கும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்..!! என்ன காரணம்..?

Recommended Video

WORLD CUP 2019 | தோசையை ஒரு பிடி, பிடிக்கும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்..!!

லண்டன்: உலக கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள நம்ம இந்திய அணியினர், வாய்க்கு ருசியாக சாப்பிடும் வகையில் தோசை கடை ஒன்றை கண்டு பிடித்துள்ளளனர். கடையின் பேர் சென்னை தோசா..!!

உலக கோப்பை கிரிக்கெட் ஜூரம் தான் இப்போது எங்கு பார்த்தாலும். அந்த தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் முதல் போட்டியில் இன்று விளையாடுகிறது. சவுதாம்ப்டன் நகரில் நடைபெறும் இப் போட்டி தென் ஆப்ரிக்க அணிக்கு 3வது போட்டி. இரண்டிலும் தோல்வி.

மே 30-ம் தேதி இங்கிலாந்தையும் ஜூன் 2-ம் தேதி வங்கதேச அணியையும் எதிர்த்து விளையாடி தென் ஆப்ரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பை தொடங்கி 6 நாட்கள் கழித்து இந்தியாவுக்கு முதல் போட்டி. இந்திய ரசிகர்களுக்கு இதுவே கொஞ்சம் ஏமாற்றம்.

இந்திய அணி தயார்

இந்திய அணி தயார்

உலக கோப்பை தொடரில் மே 22ம் தேதியே இங்கிலாந்து சென்ற இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட தயார்படுத்தி வருகிறது. தற்போது முதல் போட்டி சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. சவுதாம்ப்டன் நகரில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள் அதிகம் முகாமிடுவது அங்குள்ள ஒரு தோசை கடையில் தான்.

சுட, சுட தோசை

சுட, சுட தோசை

இரவு டின்னருக்கு வெளியே சென்றால், அங்கேயுள்ள சென்னை தோசா கடைக்கு செல்கின்றனர். அடுத்த கணம்..... சுட, சுட வரும் அருமையான தோசையை சளைக்காமல் ஒரு பிடி, பிடிக்கின்றனர். அவர்களில் 2 வீரர்களின் சுவை ஆர்வம் ஒரு படி மேலே சென்றுவிட்டது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

வேறு யாருமல்ல... நம்மூர் வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் தான். சென்னை தோசா கடையின் ரெகுலர் கஸ்டமர்களாக மாறி விட்டனர். எங்க போனாலும் நம்ம ஊரு தோசை சாப்பிட கிடைப்பதாக கூறி, இருவரும் தோசையை ஒரு பிடி, பிடிக்கிறார்களாம்.

அதிகரிக்கும் கூட்டம்

அதிகரிக்கும் கூட்டம்

இவர்கள் 2 பேர் மட்டுமல்ல.. பயிற்சியாளர் சங்கர் பாசு, அணி மேனேஜர் சுனில் சுப்ரமணியம் ஆகியோரும் தோசையை ஒரு கை பார்த்து வருகின்றனராம். அட... வீரர்கள், அணி நிர்வாகம் மட்டுமல்ல... பத்திரிகையாளரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டனர்.

அடிக்கடி முகாம்

அடிக்கடி முகாம்

உலக கோப்பை செய்திகளை எடுக்க சவுதாம்ப்டன் நகருக்குச் சென்றுள்ள இந்திய செய்தியாளர்களும் தற்போது அடிக்கடி முகாமிடுவது இந்த தோசைக் கடையில் தான். மொத்தத்தில் ஒரு தோசை கடையும், இந்திய கிரிக்கெட் வீரர்களும் என்று பட தலைப்பு வைக்காதது பாக்கி. அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டது அந்த தோசை கடை...!!! என்ன.. கிளம்பிட்டீங்க...?? தோசை சாப்பிடத் தானே...!!

Story first published: Wednesday, June 5, 2019, 14:12 [IST]
Other articles published on Jun 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+