Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் டிரெண்டான கொலவெறி பாடல்.. பாடிய கிரிக்கெட் சகோதர்கள்..! வைரல் வீடியோ

மும்பை: கிரிக்கெட் வீரர்களான குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் செல்போனை பார்த்தபடி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் வீடியோ ஏகத்துக்கும் ஹிட்டாகி உள்ளது.

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரை இந்தியா கைப்பற்றி இருக்கிறது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தொடங்கி இருக்கிறது. இந்த மூன்று தொடரிலும் இடம்பெறாத ஹர்திக் பாண்டிய தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

3 தமிழ் படம்

3 தமிழ் படம்

இந்நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டில் வெளியான படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இப் படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

ஏக பிரபலம்

ஏக பிரபலம்

படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடல் யுடியூபில் அதிகம் பேரால் பார்க்கப் பட்டது.

கொலவெறி பாடல்

அந்த பாடல் தற்போது வேறு ஒரு ரூபத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கொல வெறி பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணால் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.

ட்விட்டரில் வைரல்

ட்விட்டரில் வைரல்

இருவரும் கைகளில் செல்போனில் அந்த பாடல் வரிகளை டவுன்லோடு செய்து, அதை பார்த்தபடியே பாடுகின்றனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் குருணால் பாண்டியா பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இந்திய ரசிகர் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, August 11, 2019, 10:56 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+