Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களின் தேவைகள் லிஸ்ட்.. வாழைப்பழம், ஜிம், மனைவியுடன் ரயில் பயணம்.. ஸ்ஸப்பா

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

இந்தியா அதற்கான ஏற்பாடுகளை தற்போது இருந்தே செய்து வருகிறது. இந்திய அணி ஓரளவு தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

வீரர்கள் தேர்வு விஷயம் ஒருபுறம் இருக்க உலகக்கோப்பை சுற்றுப்பயணம் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ தற்போது செய்து வருகிறது. அதற்காக வீரர்களின் தேவைகளை பிசிசிஐ கேட்டு தெரிந்து கொண்டுள்ளது.

கோலி விடுத்த கோரிக்கை

கோலி விடுத்த கோரிக்கை

அப்படி வீரர்களின் தேவைகளை பிசிசிஐ கேட்ட போது சில சுவாரஸ்யமான கோரிக்கைகள் வீரர்களிடம் இருந்து எழுந்துள்ளன. ஏற்கனவே, மனைவிகள் வீரர்களோடு இருக்கக்கூடாது என பிசிசிஐ இங்கிலாந்து தொடரின் போது வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கோலி கோரிக்கை விடுத்து இருந்தார்.

பத்து நாட்கள் கழித்து

பத்து நாட்கள் கழித்து

அந்த கோரிக்கையை முழுதும் ஏற்காத பிசிசிஐ, கிரிக்கெட் தொடரின் முதல் பத்து நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்களில் மனைவிகளுடன் வீரர்கள் தங்கிக் கொள்ளலாம் என பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அதே சமயம், வீரர்களுடன் அவர்கள் பயணிக்கும் அணிப் பேருந்தில் மனைவிகளும் பயணிக்கக் கூடாது என்ற தடை நீடிக்கிறது.

ரயிலில் மனைவியும் வரலாமா?

ரயிலில் மனைவியும் வரலாமா?

இதை அடுத்து ஒரு வீரர் இந்திய வீரர்கள் ரயிலில் பயணித்தால் அப்போது மனைவியும் கூட வரலாமா? என விசித்தரமான ஒரு கேள்வியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேள்வி பிசிசிஐ விதியை கேலி செய்ய வேண்டி குறும்பாக கேட்கப்பட்டதாக கூட இருக்கலாம். வீரர்கள் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட காரணங்களால் ரயிலில் பயணிப்பது என்பது மிக மிக அரிது. அப்படி ஒரு வாய்ப்பு குறைவு எனும் நிலையில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ஜிம் வேண்டும்

ஜிம் வேண்டும்

அதே போல், தாங்கள் தங்கும் ஹோட்டலில் உடற்பயிற்சி செய்ய ஜிம் வசதி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஹோட்டலாக பார்த்து முன்பதிவு செய்யுமாறும் பிசிசிஐ-க்கு வீரர்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வாழைப்பழ பிரச்சனை

வாழைப்பழ பிரச்சனை

தங்களுக்கு வாழைப்பழம் கிடைக்குமா? கிடைக்காதா? எனவும் கேட்டுள்ளனர் சிலர். இந்த கேள்வி எழ காரணம், கடந்த இங்கிலாந்து தொடரின் போது, வீரர்களுக்கு அவர்களுக்கு பிடித்த பழங்களை வழங்கவில்லை என்பதே ஆகும். இதற்கு, பிசிசிஐ பதில் அளித்துள்ளது. வீரர்களுக்கு தேவையான பழங்கள் கிடைக்கவில்லை என்றால், அணி மேலாளரிடம் கேட்டு பிசிசிஐ-இன் செலவில் பழங்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அடக் கொடுமையே!! ஒரு வாழைப்பழம் கூடவா ஒழுங்கா கொடுக்க மாட்டீங்க?

Story first published: Tuesday, October 30, 2018, 14:05 [IST]
Other articles published on Oct 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+