Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு படம் நடிச்சாலும்.. "நச்"ன்னு தமிழ்ல நடிக்கணும் - நிரூபித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

மும்பை: கிரிக்கெட்டில் இருந்து சினிமாவுக்கு வந்த லிஸ்டை தான் இங்கு பார்க்கப் போகிறோம். பல சுவாரஸ்ய தகவல் உங்களுக்காக வெயிட்டிங்.

கிரிக்கெட், சினிமா தான் இந்தியாவின் இரு முக்கிய உயிர் நாடி, இவை இரண்டும் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இயங்கவில்லை என்றால்... நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி வராவிட்டாலும், கால நேரம் அவர்களை சினிமா பக்கம் தள்ளுகிறது. ஆனால், அதில் வெற்றிப் பெறுபவர்கள் என்னவோ மிகச் சிலர் தான். குறிப்பாக, தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கும் போக்கும்

 ரியல் ஹீரோ

ரியல் ஹீரோ

இந்திய கிரிக்கெட் அணியை உலக அரங்கில் கௌரவமான அணியாக உருவாக்கியதில் முக்கிய பங்கு கொண்ட ரியல் ஹீரோ சுனில் கவாஸ்கர். இவர் 'சாவ்ளி ப்ரேமாச்சி' என்ற மராத்திய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. பிறகு, 1988-ல் வெளியான மாலாமால்' என்ற பாலிவுட் படத்தில் கிரிக்கெட் வீரராகவே ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

 இறுதி படம்

இறுதி படம்

'மேட்ச் ஃபிக்ஸிங்' என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட்டு பார்த்தால், ஜடேஜா இந்திய அணிக்கு கிடைத்த முக்கியமான வீரர்களில் ஒருவர் எனலாம். ஃபீல்டிங்கில் அப்போதே கில்லி. 2003-ல் வெளியான 'கேல்' என்ற பாலிவுட் படத்தில் சன்னி தியோல் - சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார். பிறகு, 'பல் பல் தில்கே சாத்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த 'கை போ ச்சே' படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

 த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

சச்சினுக்கே ஆணவத்தின் முகத்தை புரியவைத்தவர். சச்சின் இத்தனை எளிமையாக இருப்பதற்கு காம்ப்ளியும் முக்கிய காரணம். இவர் 'அன்னார்த்' என்ற பாலிவுட் படத்தில் சஞ்சய் தத், சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார். பிறகு, 'பல் பல் தில்கே சாத்' படத்தில் அஜய் ஜடேஜாவுடன் நடித்தார். ஒரு கன்னட த்ரில்லர் படத்திலும் நடித்துள்ளார்.

 ரஜினியுடன் தர்பார்

ரஜினியுடன் தர்பார்

யுவராஜ் சிங்கின் தந்தை. தோனியை இந்த உலகத்தில் அதிகம் வெறுக்கும் நபர். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பஞ்சாபி சினிமா, பாலிவுட் என முழுநேர நடிகராக 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'தர்பார்' படத்திலும் நடித்துள்ளார். படத்தில் ரஜினியின் அறிமுக சண்டைக் காட்சியில் வாயில் பெரிய சைஸ் சுருட்டை வைத்து ஊதிக் கொண்டிருப்பாரே. அவரே தான்.

 இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

தமிழக வீரர். ஒருக்கட்டத்தில் இந்தியாவில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை விதைத்தவர். ஆனால், தொடர் சொதப்பல்களால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் ஜெயம் ரவி அண்ணனாகவும், 'போட்டா போட்டி 50/50' படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

 சினிமா முகம்

சினிமா முகம்

ஆக்ரோஷ வீரர். ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தாலும், சினிமா ரூட்டை தேடிப் பிடித்தார். இந்தியில் 'அக்சார் 2', 'கேபரட்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் 'டீம் 5' என்ற படத்தில் நடித்திருந்தார்.

 விக்ரம் படம்

விக்ரம் படம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் 'கோப்ரா' படத்தின் வில்லன் இர்ஃபான் பதான். இந்த படத்தின் ரிசல்ட்டை பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக முடிவு செய்துள்ளார். ஆனால், வெளியான டிரைலரில் பக்கா வில்லனாக மிரட்டியிருக்கிறார் பதான்.

 வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹர்பஜன் சிங். அதேபோல், 'பிளாக் ஷீப்' தயாரிப்பில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

Story first published: Friday, May 28, 2021, 21:30 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+