Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதலியுடனான பிரைவேட் ஃபோட்டோ.. காதலர் தினத்தில் பிரித்வி ஷா செய்த சேட்டை.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, காதலர் தினத்திற்காக இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்பெஷல் பதிவு ஒன்றை உடனடியாக நீக்கியது பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களுக்கு மிகவும் பிடித்த நபர்களிடம் காதலர் தின வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

இந்த சிறப்பான நாளில் கிரிக்கெட் நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல. பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் காதலர் தினம் குறித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

பிரித்வி ஷாவின் வாழ்த்து

பிரித்வி ஷாவின் வாழ்த்து

அந்தவகையில் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா போட்ட பதிவு ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 23 வயதாகும் பிரித்வி ஷாவும், பிரபல மாடல் அழகி நிதி டபாடியாவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அவ்வபோது இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களும் வெளியாகின. எனினும் இதுகுறித்து பிரித்வி ஷா எந்தவித அறிவிப்பையும் கொடுக்கவில்லை.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் தான் இன்று சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. அதாவது இன்று காலை நிதியுடன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரித்வி ஷா, அதில், 'காதலர் தின நல்வாழ்த்துக்கள் எனது மனைவியே' எனக்குறிப்பிட்டிருந்தார். ஒருவழியாக ஒப்புக்கொண்டார் என ரசிகர்களும் இந்த புகைப்படத்தை வேகமாக பரப்பினர்.

திடீர் நீக்கம்

திடீர் நீக்கம்

ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்த பிரித்வி ஷா, யாரோ ஒருவர் எனக்கே தெரியாமல் எனது புகைப்படங்களை எடுத்து அதனை எடிட் செய்து பதிவிட்டு வருகிறார். நான் எனது சமூக வலைதளப்பங்களில் எந்தவித ஸ்டோரிகளையும், பதிவுகளையும் செய்யவில்லை. தயவு செய்து அதனை புறகணித்துவிடுங்கள் என பிரித்வி ஷா கூறியுள்ளார்.

சிறப்பான ஃபார்ம்

சிறப்பான ஃபார்ம்

பல மாதங்களாக இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்த பிரித்வி ஷாவுக்கு ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக ஆடியதன் மூலம் நியூசிலாந்துடனான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. எனினும் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலாவது சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருந்த போதும், ஏமாற்றமே மிஞ்சியது.

ஸ்மித்தின் சம்பவம்

ஸ்மித்தின் சம்பவம்

இது ஒருபுறம் இருக்க, பிரித்வி ஷாவை போன்றே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் இன்று சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைதள பக்கங்களில் காதலர் தின வாழ்த்துக்கூறிய அவர், தனது மனைவி டேனி வில்லீஸுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டேக் செய்துவிட்டார். தவறுதலாக நடந்த இந்த சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 14, 2023, 18:51 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+