For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி! டெஸ்ட் யுத்தத்துக்கு கோஹ்லி படை தயார்

By Veera Kumar

டாக்கா: வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி, வங்கதேசம் வந்தடைந்தது.

வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டு அணியுடன் 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

Indian cricket team departs for Bangladesh

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பதுல்லாவில் வரும் 10ல் துவங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி்யில் ஈடுபட்டனர். பின், இன்று காலை கொல்கத்தா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு வந்தடைந்தனர்.

டெஸ்ட் போட்டியில் ஆட தேர்வாகியிருந்த கே.எல்.ராகுல், டெங்கு காய்ச்சல் காரணமாக, ஆட முடியாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 18ம் தேதி, டாக்காவின் ஷீர்-இ-பங்களா மைதானத்தில் தொடங்குகிறது. 21ம் தேதி 2வது போட்டியும், 24ம் தேதி 3வது போட்டியும் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கு டோணி கேப்டனாக செயல்படுவார்.

Story first published: Monday, June 8, 2015, 13:31 [IST]
Other articles published on Jun 8, 2015
English summary
The Indian cricket team departed for Bangladesh on Monday to play test and one-day match series. The team arrived early morning at the Netaji Subhas Chandra Bose International Airport in Kolkata to leave for Dhaka.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+