Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி சும்மா.. டோணிதான் எல்லாம்.. இந்திய அணி சக்சஸ் சீக்ரெட் இதுதான்!

சென்னை: இந்திய அணியில் இரு கேப்டன்கள் இருப்பதுதான் அணியின் வெற்றிக்கு காரணம் என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் கூறியுள்ளதில் முழுக்க உண்மையுள்ளது.

இரு 'கேப்டன்களுமே' குணநலன்களில் இருவேறு துருவங்கள். இதனால்தானோ என்னவோ நிலைமைக்கு ஏற்ப இருவரும் இணைந்து சிந்தித்து செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடிகிறது.

ஆம், அந்த இரு கேப்டன்கள், கோஹ்லியும், டோணியும்தான். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் டோணியிடமிருந்து கோஹ்லி கேப்டன் பதவியை பெற்றுக்கொண்டபோதிலும் இப்போதும் 'சூப்பர் கேப்டனாக' செயல்படுவது டோணிதான்.

ஆலோசனை மன்னன்

ஆலோசனை மன்னன்

"நான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த டோணி கொடுத்த ஐடியாதான் காரணம்" என்றார் குல்தீப் யாதவ். ஆஸி. பேட்ஸ்மேன்கள் அறியக் கூடாது என்பதற்காக சஹலுக்கு ஹிந்தியில் டிப்ஸ் கொடுப்பதும் டோணிதான். ஸ்டெம்பிலுள்ள மைக்கில், டோணி என்ன பேசுகிறார் என்பது தெளிவாக கேட்கிறது. இதனால்தான், ஹர்ஷா போக்லே கூறினார், டிவி வர்ணனையாளர்கள் மூவர் கிடையாது, டோணியோடு சேர்த்து நால்வர் என்று.

சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூட்டணி

சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூட்டணி

அஸ்வின், ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகப்படியாக ஐடியாக்களை வாரி வழங்கியது டோணிதான். அவர்களின் சிறந்த பங்களிப்பில் டோணிக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்போது இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சஹலுக்கும் அதையேதான் செய்கிறார் டோணி. அவர்களும் போட்டி முடிவில் அதை சொல்லி நன்றி தெரிவிக்க தவறுவதில்லை. அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை சஹல் 3 போட்டிகளிலும் அவுட் செய்ய காரணம் டோணியின் ஐடியாக்கள்தான். அதில் 2 முறை டோணிதான் ஸ்டெம்பிங் மூலம் மேக்ஸ்வெல்லை வழியனுப்பி வைத்தார்.

கோஹ்லியின் பெருந்தன்மை

கோஹ்லியின் பெருந்தன்மை

எந்த ஒரு அணியிலாவது கேப்டன், பவுண்டரி எல்லையில் நின்று ஃபீல்ட் செய்வதை பார்க்க முடியுமா? இந்திய அணி கேப்டன் கோஹ்லியால் அதை செய்ய முடிகிறது. பவுலர்களுக்கு வழிகாட்ட, ஃபீல்டர்களை நிறுத்த டோணி இருக்கும் தைரியத்தில்தான், பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவரான கோஹ்லியால், எல்லைக்கோட்டு அருகே சென்று நிற்க முடிகிறது. டோணி தனது வரம்புக்குள் தலையிடுவதாக கோஹ்லி நினைப்பதில்லை என்பதில்தான் இருக்கிறது அவரின் பெருந்தன்மை. மாறாக, டோணியிடமிருந்து அணிக்கு நல்லது கிடைத்தால் சரி என்ற மனப்பாங்கில் தனது பழுவை குறைத்துக் கொள்கிறார் கோஹ்லி.

ஆக்ரோஷம் இல்லை, அனுபவம் உள்ளது

ஆக்ரோஷம் இல்லை, அனுபவம் உள்ளது

டோணி சில வருடங்களுக்கு முன்பு இருந்ததை போன்று எதிரணியை ஒரு சில பந்துகளிலேயே நிலைதடுமாற வைத்து விரட்டியடிக்கும், அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால், இளம் வீரர்கள் அதை செய்ய களத்திலேயே நின்று வழிகாட்டும் வீரராக உள்ளார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அதைத்தான் செய்தார். இலங்கை தொடரிலும் அதையே செய்தார். அதேநேரம் டோணியின் ஸ்டிரைக் ரேட்டும் பாதகமான அளவுக்கு குறைந்துவிடவில்லை. பொறுமையாக அணியை கட்டி எழுப்பி அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்து ரன்களை குவிப்பதால் ஸ்டிரைக் ரேட் ஆரோக்கியமாக உள்ளது. இப்போதும் உலகின் தலைசிறந்த 'கேப்டனாகவும்', விக்கெட் கீப்பராகவும், பினிஷராகவும் டோணிதான் உள்ளார் என்பதே புள்ளி விவரம் சொல்லும் பாடம்.

Story first published: Monday, September 25, 2017, 16:13 [IST]
Other articles published on Sep 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+