Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியாளர் கம்பீரின் சம்பளம் எவ்வளவு? பெரிய மனசு காட்டிய Gambhir.. இவர் தான் சரியான சாய்ஸ்!

ஹராரே : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஊதியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு பொதுவாக குறைவான சம்பளம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நிலை ரவி சாஸ்திரி வந்த பிறகு மாற்றப்பட்டது. ரவி சாஸ்திரி ஆரம்பகாலத்தில் ஏழு முதல் எட்டு கோடி வரை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பயிற்சியாளராக தலைமை தாங்கிய போது அவருடைய ஊதியம் 10 லிருந்து 12 கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு உயர்த்தப்பட்டது.

Gautam gambhir Indian cricket team ind vs zim

இதனால் கம்பீரின் ஊதியம் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக கம்பீர் அதிக சம்பளம் கேட்பதாகவும் இதனால் தான் பிசிசிஐ இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இதன் உண்மை நிலை என்ன என்று தெரிய வந்துள்ளது.

பொதுவாக ஒரு வேலையில் சேர போகிறோம் என்றால் அதன் சம்பளத்தை தீர்மானித்து விட்டு தான் அனைவருமே வேலையை பெற்றுக் கொள்வோம் ஆனால் இந்த விஷயத்தில் கம்பீர் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கிறார். ஊதியம் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் தாம் பயிற்சியாளராக செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது என்று கூறி உடனே பதவியை கம்பீர் ஏற்றுக் கொண்டாராம்.

இன்னும் ஊதியம் கம்பீருருக்கு என்ன என்பதையே பிசிசிஐ நிர்ணயம் செல்ல செய்யவில்லை. இதன் காரணமாக தான் அது தொடர்பான எந்த தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் வெளியிடப்படவில்லை என தெரிகிறது. அது மட்டுமில்லாமல் தன்னுடைய பயிற்சியாளர் குழுவில் யார் இடம்பெற வேண்டும் என்றும் ஒரு லிஸ்ட் அனுப்பி இருக்கிறார்.

அதில் யார் சேர்வார்கள் யார், மாற்றப்படுவார்கள் என்ற தகவல் இனி தான் வரும். இதன் காரணமாக பிசிசிஐ ஒட்டுமொத்தமாக பயிற்சியாளர் குழுவின் ஊதியத்தை பிறகு முடிவு செய்யும் என தெரிகிறது. ராகுல் டிராவிட்க்கு வழங்கப்படும் அதே சம்பளம் கம்பீருக்கும் வழங்கப்படலாம் என தெரிகிறது.சில லட்சங்கள் மட்டும் வித்தியாசப்படும் என்றும் கூறப்படுகிறது. சம்பளத்தைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் முதலில் வேலைக்கு நான் வருகிறேன் என்று கம்பீர் எடுத்திருக்கும் இந்த முடிவு இவர்தான் சரியான ஆளு என்று ரசிகர்களை பாராட்ட வைத்திருக்கிறது.

Story first published: Thursday, July 11, 2024, 7:43 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+